கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விருத்தாசலம் இன்றியமையாதவர் என்பது ஒருபுறமிருக்க, சிறுகதை எழுதிய முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்களில் முதல்வர் என்ற முறையில் அவருடைய கதைகள் தனிக் கவனத்திற்குரியவை என்பதை இத்தொகுப்பு காட்டுகிறது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிக நுட்பமாகப் பல கதைகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. குழந்தைகளின் உணர்வுகளும் மனத்தைக் கவரும்வ&
இந்நூலில் மொத்தம் 22 கதைகள் உள்ளன, அதில் முதல் 15 கதைகள் ‘காசுமாலை’ என்ற தொகுப்பில் வெளிவந்தவை. இந்த தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், புதுமைப்பித்தன் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே எழுதியவை.
இவர் கமலா விருத்தாச்சலம் என்றோ கமலா புதுமைப்பித்தன் என்ற பெயரில் இல்லாமல் ஸ்ரீமதி. எஸ். கமலாம்பாள் என்ற பெயரில் எழுதி வந்திருக்கிறார். புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் மனைவி என்று அவர் காட்டிக்கொண்டு எந்த சலுகையும் பெற விரும்பவில்லை.
கமலா விருத்தாசலம் அவர்களை வாழ்க்கையில் மட்டும் துணையாக இருக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் இலக்கியத்திலும் துணையாக இருக்க வேண்டும் என்று பேராசைப்பட்டார் புதுமைபித்தன் அவர்கள்.
நீ நன்றாக கதை எழுதுகிறாய், அதை பற்றி எல்லாம் பெரிதும் யோசிக்காதே, கவலை படாதே, தொடர்ந்து எழுதி கொண்டே இரு. உன் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாற்றிப்போட்டால் போதும் என்று தொடர்ந்து சொல்லி கொண்டே வந்தார். அது மட்டும் இல்லாமல் உன் கதை எந்த நிலையில் உள்ளது, ஏதாவது நீ எழுதினியா அதன் பிறகு, நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதிக் கொண்டே இரு என்று நினைவூட்டி இருக்கிறார்.
கமலா அம்மாவின் எழுத்து மிகவும் எளிமையாகவும், அற்புதமாகவும் அனைவருக்கும் மிக எழுதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது. இந்த தொகுப்பில் இடம்பெற்ற அனைத்து கதைகளும் என்னை கவர்ந்தது, இருப்பினும் எனக்கு மிகவும் கவர்ந்த கதைகளில் சில: காசுமலை, குழந்தை மீனாள், முதலைச் சட்டை, நினைப்பும் நடப்பும், அவளும் அவனும், காதல் பூர்த்தி, புரை ஓடிய ஆசை, பாசக் கயிறு, காற்றினிலே வந்த கீதம், சந்தேகம், என ஒரு பெரும் பட்டியில் உள்ளது. இது வரை நான் வாசித்த புத்தகங்களை விட, இந்த புத்தகம் என்னை பெரிதளவில் ஈர்த்தது.
காசுமலை என்ற தொகுப்பில், பணத்தின் முக்கியத்துவம் பற்றியும், பணம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில்/ வருமானம் இல்லை என்றால் மக்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பது பற்றியும், அதனால் ஒருவன் அணுகிய சந்தர்ப சூழ்நிலைகள் பற்றியும் அழகாக கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு கதைகளிலும் எழுத்தாளர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்த புத்தகத்தில் 22 கதைகள் இருப்பினும் ஒவ்வொன்றும் வேறுபட்ட சூழ்நிலையை/கருத்துக்களை கொண்டே உருவாக்கியுள்ளார்.
இவர் எழுத்தில் எந்த ஆடம்பரம் இல்லை, பெரிதாக வர்ணனை கூட எதுவும் இல்லை, மனித உணர்வுகளைப் பற்றி ஒவ்வொரு கதைகளிலும், மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். இந்த புத்தகத்திற்கு 5star ரேட்டிங் நிட்சயம் கொடுப்பேன். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகத்தில் இதுவும் ஒன்று நினைவுத் தீ. இந்த புத்தகம் வாசிக்கும் போதும் சரி, அதன் பிறகுமே, புதுமைபித்தன் அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் வாசிக்க வேண்டும் என்று ஆசை தோன்றியது.