விஜேஷ் உள்ளே கூட்டிப்போய் ஒரு நாற்காலியைக் காட்டிவிட்டு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தான். “என்ன விஷயம் சொல்லு...” “நான் ஒரு சிகரெட் ஸ்மோக் பண்ணிக்கலாமா ஸார்...?” விஜேஷ் தலையாட்டினான். “ம்... பண்ணிக்க...” அவன் ஒரு சிகரெட்டை பதற்றமில்லாமல் நிதானமாய் பற்ற வைத்துக் கொண்டு முதல் புகையை விட்டான். “ஸார்...! நீங்க டைரக்ட் பண்ணின ஆறு படங்களில் மூணு படம் க்ரைம் சப்ஜெக்ட். அந்த மூணு படங்களையும் ரொம்பவும் அற்புதமா பண்ணியிருந்தீங்க. நாட்டில் நடக்கிற அநியாயங்களை தட்டிக் கேட்கிறதுக்காக இளைஞன் ஒருத்தன் சட்டத்தை கையில் எடுத்துக்கிட்டு பசுத்தோல் போர்த்திய பெரிய மனுஷங்களை ஹிட் லிஸ்ட்படி தீர்த்துக் கட்டற கதை ரொம்பவும் ஹைலைட்.