கண்ணாடி டீபாயின் மேல் சொம்பை வைத்தவள் - கட்டிலின் நுனியில் அமர்ந்தாள். ரவிச்சந்திரனின் குரல் தொடர்ந்தது. “ஏற்கெனவே சொன்ன மாதிரி... நான் உன்கிட்டே முக்கியமான சில விசயங்கள் பேசணும்...” ராணியின் பார்வை, “பேசுங்க...” என்பதுபோல அவன் முகத்தை நோக்கியது. ரவிச்சந்திரனிடம் இருந்து வார்த்தைகள் உதிர ஆரம்பித்தன. “நான் உண்டு... என்னோட குரூப் கன்சர்ன் உண்டுன்னு இருந்த என்னை திடீர்ன்னு பெண் பார்க்க அழைச்சிட்டு வந்தாங்க... உன்னைப் பார்த்தேன்... மனசுக்குப் பிடிச்சது... சம்மதம் சொன்னேன்... கம்ப்யூட்டர் துறையில் பல புதுமைகள் செஞ்சு நீ புகழ் பெற்றவள்னு உன் வீட்டைச் சேர்ந்தவங்களும் என் வீட்டைச் சேர்ந்தவங்களும் சொல்லி எனக்குத் தெரியும்... ஆனா உனக்கு எல்லாத் திசையிலும்...