ஐந்து நிமிஷ சிரமமான நடைக்குப் பின் 'ப்ரஸ்மீட்’டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வி.ஐ.பி. அறைக்குள் கிரிக்கெட் வீரர்கள் நுழைய, உள்ளே வட்டமாய் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த நிருபர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டினார்கள். அதில் பாதிபேர் பெண்கள். கதவு சார்த்தப்பட்டு எல்லோரும் நாற்காலிகளில் உட்கார்ந்ததும், அந்த ஆங்கில வார இதழின் அழகான பெண் நிருபர் எழுந்து, மைக்கை தன் லிப்ஸ்டிக் பூச்சு உதட்டுக்குக் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள், “இங்கிலாந்து சீரிஸை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியிருக்கும் உங்களுக்கு ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் சார்பில் எங்கள் வாழ்த்துக்கள்! இந்த சீரிஸ் முழுவதும் மிஸ்டர் நரேஷின் அதிரடி ஆட்டமும் மிஸ்டர் பங்கஜ்ĩ