டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு - இருவரும் காருக்கு வந்தார்கள். ராம்ராஜ் காரை ஓட்ட, ஜெயந்தி அவனருகே உட்கார்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள். "என்னங்க உங்களுக்கு சந்தோசம்தானே?" "பின்னே?" "எனக்கு ஜாதிமல்லிப் பூவும் - லாலா கடையில் முந்திரி அல்வாவும் வேணும்." "போகும்போது வாங்கிட்டு போயிடலாம். பத்து முழம் பூவும் ஒரு கிலோ அல்வாவும் போதுமா?" "உங்களுக்குத்தான் சந்தோசம் வந்தால், தலை கால் புரியாதே." காரை ஒரு வளைவில் திருப்பினான் ராம்ராஜ். ஜெயந்தி அவன் தோளோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டு கேட்டாள். "நமக்கு என்ன குழந்தை பிறக்கும்னு நினைக்கிறீங்க? ஆணா.... பெண்ணா?" காரின் வேகத்தை சட்டென்று குறைத்து - ஆள் நடமாட்டமற்ற அந்த ரோட்டில் - ஒரு மரத்துக்கு கீழே கĭ