கார் பனகல்பார்க்கைச் சுற்றிக் கொண்டு உஸ்மான் ரோட்டில் பாய்ந்து பர்கிட் ரோட்டு வளைவில் திரும்பி நூல்பிடித்தமாதிரி ஓடியது. தி.நகர் டெர்மினஸ்ஸிலிருந்து பஸ்கள் சொற்பப் பயணிகளோடு வெளியேறிக் கொண்டிருந்தன. பால்பூத்தில் பெண்கள் காத்திருந்தார்கள். பெட்டிக் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்த செய்தித்தாள்களின் போஸ்டர்களைப் படித்தே தன் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள் சிலர். கார் பர்கிட் ரோட்டின் கோடிக்குப் போய் மித்ராராயின் வீடு இருந்த ஆர்த்தி அவென்யூவுக்குள் புகுந்தது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் நிறைய கார்கள் தெரிய மித்ராராயின் வீட்டுக்கு முன்னால் இரண்டு போலீஸ் ஜீப்புகளும் போலீஸ் கமிஷனரின் வெள்ளை நிற அம்பாசிĩ