அற்புதராஜ் ரிஸீவரை வைத்துவிட்டு, ராஜ்பாபுவையும் கோகிலாவையும் ஏறிட்டார்.
“நம்ம கடத்தல் சரக்குகளைப் பரிமாறிக்கிறதுக்காக ஏற்பாடு பண்ணியிருக்கிற இந்த ‘சமூக சேவை’ திட்டத்தினாலே எனக்கு மாசா மாசம் அஞ்சு லட்ச ரூபாய் தண்டம். கோடிக்கணக்கா லாபம் சம்பாதிக்கிறோம். அதனால இந்த அஞ்சு லட்சம் ரூபாய் நஷ்டம் பெரிசாத் தெரியலை.”
ராஜ்பாபு புன்னகைத்தான். “ஸார்! இந்த சமூக சேவைத் திட்டம் உங்களை ஒரு கொடை வள்ளலாவே மாத்தியிருக்கு. உங்க பேரைக் கேட்டாலே கையெடுத்துக் கும்பிடற அளவுக்கு ஜனங்க மாறியிருக்காங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தத் திட்டத்தைக் கைவிட்டுடாதீங்க ஸார். இந்த சமூக சேவைப் போர்வை நமக்கு அவசியம்.”
“இல்ல ராஜ்பாபு... இதை நாம ரொம்ப நாளைக்குப் பண்ணிட்டி&