பரத்சந்திரன் I.P.S, என்று சுரேஷ் கோபி நடித்த படம் ஒன்று. அதில் ஒரு கீழ்மட்ட போலீஸ் அதிகாரி உயர் அதிகாரியிடம், கொலைபட்ட பிணத்தை முதலில் யார் பார்த்தது எனும் கேள்விக்கு வரும் பதில் "வேஸ்ட் பெறக்கான் வந்த தமிழன்மாராணு ஆத்யம் கண்டது" என்று.
கவனியுங்கள், குப்பை பொறுக்க வந்தவன் முதலில் கண்டான் என்று அல்ல. குப்பை பொறுக்க வந்த தமிழன் என்று.
புலியை முறத்தால் அடித்து விரட்டியதும். தேர்க்காலில் சொந்த மகனை ஏற்றிக்கொன்றதுவும். புறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்கு பாலூட்டிய முலைகளை அறுத்து எறிந்ததுவும். பெய் என்றால் பத்தினிக்கு மழை பெய்ததுவும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றி வந்ததுவும், கடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை பொறுக்கத்தானா?
விதியே தமிழ்ச் சாதியை என் செயப் படைத்தாய்?
=====================================================
42 கட்டுரைகளையும் 360 கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார் ஆசிரியர்.
போற்றத்தக்க எழுத்து நடை. சங்கால நூல்கலிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து மேற்கோள்களும் அருமை.