Jump to ratings and reviews
Rate this book

தலைகீழ் விகிதங்கள்

Rate this book
நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆசார அநுஷ்டானங்கள், மனிதனை வீர மனிதனிலிருந்து பிளவுபடுத்தும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய குறைகளைப் பேணிச் சரிந்துபோன வாழ்வு இது. இன்றைய வாழ்வின் மீது இவர் காட்டியுள்ள ஈடுபாடு நம் பிரபல நாவலாசிரயிர்கள் காட்டத் தவறியதாகும்.

Unknown Binding

First published August 1, 1977

18 people are currently reading
188 people want to read

About the author

Nanjil Nadan

43 books80 followers
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
66 (50%)
4 stars
42 (32%)
3 stars
20 (15%)
2 stars
3 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Praveen (பிரவீண்) KR.
230 reviews33 followers
April 7, 2020
எனது சொந்த ஊர் நாகர்கோயில் பக்கம். பிழைப்புக்காக வேறு ஊர் வந்து சில வருடங்கள் கடந்த பிற்பாடும் நினைவில் பச்சை குத்தபட்டே இருக்கிறது அந்த இடம். அதனாலே தான் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சு.ரா, நீல பத்மநாபன் அவர்களின் புத்தகங்களை அதிகம் விரும்பி படிப்பேன். புத்தகத்திலாவது அந்த ஊரில் வாழலாம் அல்லவா!!! சமீபமாக நான் படித்த புத்தகம் “தலைகீழ் விகிதங்கள்”. நாஞ்சில் நாடன் முதல் நாவல் படைப்பு.

கதை சுருக்கம் என்று சொல்ல போனால் ஒரு பட்டதாரி இளைஞனின் கதை. வேலை தேடிகொண்டிருக்கும் இளைஞன். அவ்விளைஞனை ஒரு பெரிய வீட்டு பெண்ணுக்கு மனம் முடிச்சு வெக்க அவன் வாழ்கையில் வரும் மாற்றங்கள். தன் வீட்டு வசதிகளில் வாழவே மனைவி ஆசைப்படுகிறாள். வீட்டு மாப்பிளையாக இருக்க முடியாமல் வேலை தேடுகிறான். மாமனார் மாமியார் ஏசல்கள் தாங்கமுடியாமல் வீடை விட்டு வெளியேறுகிறான். அவனுக்கு வேலை கிடைக்குதா, மனைவி அவனுடன் ஒன்றி செல்கிறாளா என்பது தான் கதை.

என்னை மிகவும் கவர்ந்தது நாஞ்சில் நாடனின் கதை களம். நாஞ்சில் நாட்டு வாழ்கையும் வட்டாரமும் நடத்தைகளையும் மனதில் கொண்டு எழுதியுள்ளார். நான் வளர்ந்த ஊரும் பழகிய மக்களையும் தத்ரூபமாக கண் முன்னால் நிறுத்தியிருக்கிறார். அதனாலேயே அதில் ஒரு மாய பாத்திரமாக உள்ள்சென்று என்னால் புத்தகத்தில் வரும் நிகழ்வுகளை காண முடிந்தது. படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை அழகாக சித்திரித்திருக்கிறார். அவனுள் இருக்கும் கோபம், வருத்தம், குமுறல், காமம், சந்தோசம் என எல்லா ரசங்களையும் காகிதத்தில் படைத்திருக்கிறார். குத்தி பேசும் மாமியார், சிறு வயதாயினும் அறிவுடன் செயல்படும் நாத்தனார், அவனுக்காக பரிதாப படும் நண்பன், அவன் உள்குமுறல் புரிந்தும் கோவத்திற்கு பயப்பட்டு பேச முடியாமல் துடிக்கும் அம்மா என நல்ல பத்திரங்கள் பல.

தங்கர் பச்சான் இந்த புத்தகத்தை “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் திரைக்கு கொண்டு வந்தார். அந்த படத்தை பார்த்தது இல்லை. அதனால் நாவலுக்கு எந்த அளவுக்கு நீதி அளித்திருக்கிறார் என்று தெரியவில்லை.
Ego என்ற சொல்லால் Cliche உணர்வு கொடுத்தாலும் கதை நகரும் வழியும் ஒரு ஒரு ஊரின் வாழ்கையை த்ரூபமாக கொண்டு வந்த விதமும் எழுத்தாளர் திறனும் பாராட்டத்தக்கது.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
February 26, 2022
வசதியான குடும்பத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விட்ட ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மிக நுட்பமான முறையில் சுவைபட ?! இந்நாவல் விவரிக்கிறது.

மிக முக்கியமான புத்தகம் இது.
Profile Image for Srikumar Krishna Iyer.
308 reviews10 followers
July 28, 2024
Great writing.
A life journey with Sivadhanu.
Really gives a very nice feel especially the 70s era when getting job, marrying off girl children were big social issues.
The ending is subtle and with a happy note.
Hoping to explore more of Nanjil'n.
Profile Image for Mahesh.
5 reviews18 followers
May 8, 2020
தலைகீழ் விகிதங்கள் ஒரு Coming-Of-Age நாவல்.

வறுமையில் வாடும் சிவதாணுவிற்கு பெரிய இடத்தில் சம்பந்தம் வருகிறது. மாமனார் செல்வந்தர்; முசுடு; சிவதாணுவின் பெற்றோரோ அன்றாடங்காய்ச்சி. பணம் என்ற ஒன்று இல்லாதன் விளைவு, இந்த இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் உராய்வுகள், ஈகோ மோதல்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என எல்லாத்தையும் காத்திரமாக சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன். வேறு வழியில்லாமல், வேலை கிடைக்கும் வரை மாமனார் ஹோட்டலில் (வேண்டா வெறுப்பாக) மேற்பார்வைப் பார்க்கிறான் சிவதாணு. பின், நல்ல வேலை கிடைத்து மனைவியை அழைத்துப் போக வருகையில் நடக்கும் அந்த கொந்தளிப்பான சம்பவம், சிவதாணுவை கொலை வெறியாக்குகிறது. கடைசியில், மனைவியோடு சேர்ந்தானா இல்லையா என்பதை நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதவை, சதுரங்க குதிரை; இதற்கடுத்து, நான் வாசிக்கும் மூன்றாவது நாவல் - தலைகீழ் விகிதங்கள். நாஞ்சில் நாடனுக்கு இது முதல் நாவல். இந்த மூன்றில் மிகச்சிறந்த நாவல் என்றால் சதுரங்க குதிரை என்று சொல்வேன். சதுரங்க குதிரை, கல்யாணமாகாத, நாற்பது வயதை ஒத்த ஒருவனது தனிமையை-Mid-life-boredom, பேசுகிற நாவல். மிதவையைப் போலவே பம்பாயயைப் பின்னணியாக கொண்ட நாவல். 200 பக்கங்களுக்குள்தான் இருக்கும். தலைகீழ் விகிதங்களைப் போல அதிக அலங்காரங்கள், உவமைகள், அதீத மனக்குமுறல்கள் இல்லாத, ஆனால், சொல்ல வேண்டியதை சுருக்கமாய் சொல்லிய நாவல். சதுரங்க குதிரையில் இருக்கும் மொழியின் செறிவு, முதிர்ச்சி, தலைகீழ் விகிதத்தில் கிடையாது.

அதற்காக தலைகீழ் விகிதங்கள் சுமாரான நாவலா ? நிச்சயம் இல்லை. நல்ல நாவல். 40+ ஆண்டுகள் கழித்தும் இந்த நாவல் வாசிக்கப்படுவதே அதன் வெற்றிக்குச் சான்று.

நாவலில் எனக்குப் பிடித்தது சிவதாணுவின் பாத்திர படைப்பு. எப்பேற்பட்ட‌ மனிதனும் ஒரே மாதிரி எப்போதும் இருப்பதில்லை, எதிர்வினையாற்றுவதில்லை. ஒவ்வொருவர் பார்வையில் அவன் வேறுபடுவான். சந்தர்ப்ப சூழ்நிலை, வாழ்க்கைப் போக்கு, குடும்பச் சிக்கல், புறக்கணிப்பு என எத்தனையோ மாற்றங்களை ஒருவன் சந்திக்கிறான். இது ஒவ்வொன்றுக்கும் ஒரே மாதிரி எவனும் செய்ய react மாட்டான். உணர்ச்சி கொந்தளிப்பு, கழிவிரக்கம், கையாகாலத்தனம், கோபம் என சிவதாணுவின் அத்தனை பரிமாணங்களையும் நாம் பார்க்க முடிகிறது. மனைவியிடம் கோபப்படுகிறான்; பின், அதை நினைத்து வருந்தி, சே! ஏன் அநாவசியாக அவளிடம் கோபப்பட்டோம்; அவளும்தான் என்ன செய்வாள் என்று வருந்துகிறான். இதுபோல நிறைய இடங்கள்.
சிவதாணு என்ற இளைஞனின் அட்டகாசமான Character Study, தலைகீழ் விகிதங்கள்.

இதைத்தாண்டி, நாஞ்சில் வெள்ளாளர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கிராமத்து நையாண்டி, அப்போதைய சமூகப்பின்னணி, சடங்கு சம்பிராதாயங்கள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது; விமர்சிக்கவும் படுகிறது.

நல்லதொரு வாசிப்பு அனுபவம்.
Profile Image for Saravanakumar S K.
60 reviews5 followers
April 12, 2020
This 1977 novel was made as 'Solla marantha kathai' movie in 2002. I had already watched the movie many years ago. I don't usually read the book after watching the movie version of it though I would do it in the other order. This one somewhat got into my list and books by the best of author's and availability of the book. After reading the book I went on to watch the movie again. The Director Thangarbachan really justified the novel on making the movie despite the 25 years gap.
Despite as the first novel Nanjil Nadan did great work on this novel. It looks like he was one of few to use regional dialects in 1977.
Profile Image for ManoJ M.
14 reviews5 followers
May 17, 2019
பல தரப்பட்ட நட்புகளை (தாத்தா பேரன் வயதில், சம வயதில், ஆண் பெண்) எனக் காணலாம். நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ள நாவல். உறவைக் காட்டிலும் நட்பை சற்றே உயர்த்தி கூறும் தருணம், நண்பர்களாய் ஆரம்பித்து உறவை விடவும் நெருக்கமாய் வாழ்வில் சிலர் ���லந்து பின் நம்மை கை பிடித்து நடத்தி செல்பவர்களாதல் என அனைத்தும், நாம் நடைமுறையில் கண்டிருக்க கூடியதே.
நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தை இந்நாவலில் ஆரம்பித்தது மேலும் அவர் படைப்பை படிக்க தூண்டுகிறது. நாஞ்சில் நாட்டு வழக்கிலே படித்தது மற்றுமொரு இனிய அனுபவம்.
Profile Image for Lekshmana Perumal.
13 reviews4 followers
February 20, 2019
Don't miss it

விலக்கும் போது விலகி, கையை எடுத்ததும் கூடிவிடும் குழி தாமரைப் பாசிகளைப்போல நினைவுகள் மீண்டும் மீண்டும் மனக் குளத்தைப் போர்த்துகின்றன. அவற்றிலிருந்து ஒடி ஒளிவது எப்படி?

ரயிலில் ஏறி அமர்ந்ததும், நாட்டை விட்டு நகராத வறுமையைப் போல, புறப்படும் நேரம் தாண்டியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நின்றது வண்டி. எல்லோருடைய வசவுகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு, சினை எருமையைப் போல அசைந்து, அசைந்து புறப்பட்டது. அதிகக் கூட்டமில்லை. சன்னலோரமாக உட்கார்ந்திருந்த சிவதாணுவுக்குச் சிறுபிள்ளைத் தனமான குதூகலம். பணத்தைக் கண்டு ஆளாய்ப் பறந்து பேயோட்டம் ஒடுகின்ற மனிதர்களைப் போல மரங்களும் மட்டைகளும் பின்னோக்கி ஓடின. வீடுவீடாக நின்று ‘ஐயாவுக்கு நல்லகாலம் பொறக்குதா?’ என்ற கேள்விக்கு ‘ஆமாம், ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு நெல்லையோ பிற தானியங்களையோ பெற்றுக்கொண்டு நகரும் சங்கரன் காளையைப்போல, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று சுகதுக்கங்களை விசாரித்துக்கொண்டு கிளம்பியது வண்டி. இருள் அரக்கனை வேல் கொண்டு எறியும் வீரனைப்போல் இரயிலின் முன்விளக்கு குவியலாகப் பாய்ந்தது. நீ என்னை என்ன செய்துவிட முடியும் என்று இருள் ஒளியை விழுங்கி ஏப்பமிட்டது. மரண அடிபட்டதைப் போல, ‘கூ’ வென்ற ஓசையுடன் ஆறுமுகநேரியைத் தாண்டியது வண்டி.

சூரியன் செங்கோளமாகச் சரிந்து கொண்டிருந்தான். கிளை தாழ்ந்து தொங்குகின்ற மாமரத்தின் செங்காய்களைச் சிறுமிகள் கரங்களை உயர்த்திப் பிடித்துப் பறிக்க முயல்வதைப் போல சூரியன் செங்கோளத்தைப் பறித்துவிட கடல் சிறுமி அலைக்கரங்களைத் தூக்கித் துள்ளி ஆர்ப்பரித்தாள். அவளுக்கு இரங்கியதைப் போன்று கதிரவன் மெல்ல மெல்ல தாழ்ந்து கொண்டிருந்தான்.


தீயில் வாட்டிய வாழையிலையும், உள்ளே இருக்கிற தோசை, மிளகாய்பொடி நல்லெண்ணையும் கலந்து மெலிதாக எழுகின்ற அந்த வாசனை. பொட்டலம் கையில் ஏற்படுத்தும் கதகதப்பு அவனுக்கு ஆனந்த அனுபூதிதான்.

...very well written. Author imagination, local language characters are very good... You fall into love in this book once you read....

Profile Image for Saranya Dhandapani.
Author 2 books177 followers
January 11, 2024
#242
Book 3 of 2024- தலைகீழ் விகிதங்கள்
Author- நாஞ்சில் நாடன்

“காலம் என்பது இருந்த இடத்திலே அசையாமல் இருப்பதில்லை.நகர்ந்துக் கொண்டே,சுழன்று கொண்டே இருக்கிறது.அந்த சுழற்சியை மனிதன் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் பாதிப்புகள் அவன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.”

நான் வாசித்த முதல் நாஞ்சில் நாடன் புத்தகம்.ஏன் இத்தனை ஆண்டுகள் இவரது எழுத்துக்களை படிக்காமல் போனேன் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சாதாரணமான கதை,சாதாரணமான கதாபாத்திரங்கள். நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்த,கேள்விப்பட்ட சம்பவங்களை சுற்றித் தான் கதை. அதை இத்தனை அழகாக,கோர்வையாக எப்படி இவரால் எழுத முடிந்தது! இதுவரை நான் வாசித்த எது போலும் இவரது எழுத்துக்கள் இல்லை. இன்னும் நிறைய நாஞ்சில் நாடன் வாசிக்க வேண்டும்!

ஒரு ஏழை வாலிபன்,பட்டதாரி முடித்து வேலை கிடைக்காமல் தவிக்கிறான். அவனுக்கு ஒரு தங்கை,இரு தம்பிகள்-இவனது வருமானத்தை நம்பி் தான் கடக்க வேண்டும் என்ற நிலை,ஆனால் இவனுக்கு வேலை கிடைக்கவே இல்லை.இந்த சமயத்தில் ஒரு வசதியான குடும்பம் இவனுக்கு பெண் கொடுக்க,திருமணமும் நடக்கிறது.இவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்க நினைக்கிறார்கள்.இவனுக்கு வேலை கிடைத்ததா?இந்த சமுதாய ஏற்றத்தாழ்வால் அவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் கதை.

தெளிந்த நீரோட்டம் போல் ஒரு கதை! மனித மனங்களை,அதன் வினோதங்களை இதை விட அழகாக,உண்மையாக எழுத முடியுமா என்று வியக்க வைக்கிறார். இது அவருடைய முதல் நாவல் போலவே இல்லை. அத்தனை perfection🫶
58 reviews1 follower
March 13, 2022
அருமையான நாஞ்சில் நாட்டு குடும்பக் கதை

நாஞ்சில் நாடு சார்ந்த வட்டார மொழியில் எழுதப்பட்ட அருமையானதொரு கதை. சொந்தக் காலில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வளவு நுண்ணியமாக இதுவரை எந்த ஒரு கதையிலும் நான் படித்ததில்லை.
கதாபாத்திரங்களின் உணர்வுகளை அவர்களது வட்டார மொழிகளின் மூலம் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நாஞ்சில் நாட்டிலேயே சில நாட்கள் வாழ்ந்த ஒரு உணர்வினை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ளார். அருமையான ஒரு புத்தகம்.
இந்தப் புத்தகம் சொல்ல மறந்த கதை என்று திரைப்படமாக வந்துள்ளது கேட்டு மகிழ்ச்சி. இந்தப் புத்தகத்தை படித்த பின் திரைப்படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்து உள்ளது.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
June 12, 2018
வேலையின்மை தரும் உறவு சிக்கல்களை யதார்த்தமாக சொல்கிறது இந்நாவல்

துவங்கும் முன்பு வேலையில்லாமல் ஒருவர் படும் அவதிகளை சொல்லும் நாவல் என்றே எண்ணினேன். பின்பு அது அப்படி அல்ல என்று புரிகிறது. வாழ்வின் பல இடங்களை மிக அழகாக தீவிரமாக தொட்டு செல்கிறது இந்த நாவல். நாஞ்சில் நாடன் ஐயா அவர்களின் மற்ற நாவல்களையும் சிறுகதைகளையும் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்
Profile Image for Sathish Karky.
21 reviews
July 11, 2021
எதார்த்தத்தை எழுத்துக்களால் பின்னிப் போட்டுள்ளார் நாஞ்சில் நாடன். உரையாடல்களை சிறப்பாக நிறைய எழுத்தாளர்கள் கையாண்டுள்ளார். ஆனால் மனதின் புளுக்கங்களை இவரைப்போல யாரும் கையாளவில்லை. அற்புதமான கதைக்களம்... உணர்வினை சிறப்பாக பிரதிபலிக்கும் நடை.
Profile Image for Saravanapiriyan K.
271 reviews3 followers
March 26, 2023
அருமையான புத்தகம்

மிகவும் அருமையான புத்தகம். சிவதாணுவின் வாழ்க்கையை சிறப்பாக சொல்லியுள்ளார் எழுத்தாளர். பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு வேலை தேடும் இளைஞனின் திருமண வாழ்க்கையை பற்றி சொல்கிறது இந்த நாவல்.
3 reviews
July 15, 2021
Little bit difficult to understand the naanjil slang. Good story.
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.