“ஏன் உனக்கு தெரியாதா? எங்கிட்ட வேலைக்கு வந்தா, நான் உங்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்குவேன்னு..?” “இத்தன மோசமா நடந்துக்குவீங்கனு எதிர்பாக்கல..” “எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள், அதுதான் வாழ்க்கை.. நானும் சிலதை எதிர்பார்க்கல, ஆனா நடந்துச்சே..?” “இல்ல… என்னால… இ.. இப்படி எல்லாம் இருக்க முடியாது.” “சரி, என்ன பண்ணலாம்?” “என்னை, விட்டுடுங்க..” “வாய்ப்பில்ல.. நீ என்னோட கண்ணுல பட்டதுக்கு அப்பறம், உன்னோட வாழ்க்கை உங்கையில இல்ல…” “நீங்க இப்படி இருப்பீங்கனு, நான் நினைச்சிக் கூட பார்க்கல…” “நான் சொல்றத கேட்கறதை தவிர, உனக்கு வேற வழியில்ல ஜான்வி.” “இல்ல, என்னால முடியாது. இனி என்னால இங்க வேலைக்கு வர முடியாது.” “அந்த முடிவ, உன்னால எடுக்க முடியாது.” “பிளீஸ், உங்கள கெஞ்சிக் கேட்டுகறேன். என்னை விட்டுங்க.” “ஓகே, நீ வேலைக்கு வர வேணாம். ஆனா, வாரம் ஒருநாள், என்னோட கெஸ்ட் அவுஸ் வா…” என்று ஆதவன் சொல்லவும். “எங்கிட்ட இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்ல…?” “இதுல வெட்கப்பட என்ன இருக்கு? எந்த ஆம்பளையும் ஒரு பொண்ணு கிட்ட கேட்காத ஒன்ன, நான் உங்கிட்ட கேட்கலயே..?” “ஆனா, நீங்க என்னை பழிவாங்க இப்படி பண்றீங்க..” “நான் இல்லனு சொல்லல…” “இல்ல முடியாது… என்னால இப்படி எல்லாம் இருக்க முடியாது.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். ஆனா, இது மட்டும் வேணாம்.” என்றவளிடம் அத்தனை மன்றாடல்…! “ம்ம்.. ஓகே. அப்ப ஒரு கோடி நெட் கேஷ் எடுத்து வை…!” “எ.. என்ன. ஒரு கோடியா? அன்னைக்கு பத்து லட்சம் தான சொன்னீங்க?” “உனக்கு ஒருகோடி கேட்கலாம்….” “இல்ல… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல…! இருந்தாலும் கொடுக்க முடியாது. நீங்க சொல்ற எதையும் கேட்க முடியாது… கோர்ட்டுக்கு போவீங்க, அவ்வளவு தான? போங்க, எம்மேல கேஸ் போடுங்க. உங்களால என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க.” என்றவள் நிற்காமல் அங்கிருந்து நடந்துவிட்டாள்.