பொத்தகம் : சொல்லாததையும் செய் எழுத்தாளர் : சோம வள்ளியப்பன் பதிப்பகம் : சிக்ஸ்த்சென்ஸ் பக்கங்கள் : 103 நூலங்காடி : ஈரோடு புத்தக கண்காட்சி மேலாண்மை, சுய முன்னேற்றம், பற்றி எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் சோம வள்ளியப்பன் அவர்கள் முக்கியமானவர். சுய முன்னேற்றம் குறித்து தமிழில் பொத்தகங்கள் உள்ளதா என்று தேடிக் கொண்டிருக்கும் போது தான் இந்தப் பொத்தகம் என் நிலைப்பேழைக்குள் வந்தது. 31 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்தப் பொத்தகத்தில் எனக்கு பிடித்த சில கருத்துகள் : வாய்ப்புகள் எப்போதும் , நம் தட்டிற்கு உணவு போல நேரடியாக வராது. இலைமறை காயாக நம்மைச் சுற்றி இருந்துக் கொண்டுத் தான் இருக்கிறது. நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . தோனியாகவே இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் நிரூபித்துத் தான் ஆக வேண்டும் . ஒரு போட்டியில் / நிகழ்வில்/இடத்தில் தன்னை நிரூபித்துக் கொண்டுத் தான் இருக்க வேண்டும் . வேகமாக ஓடுவது / செயல்படுவது முக்கியமல்ல , எந்த திசையில் செல்கிறோம் என்பது தான் முக்கியம் . பொத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை (என்னையும் சேர்த்து தான் ) பொத்தக எண்ணிக்கை முக்கியமல்ல, அதில் உள்ளவற்றை எப்படி நம் வாழ்க்கையில் கடைபிடிக்கிறோம் என்பது தான் முக்கியம் . வாய்ப்பு வந்தால் தான் செயல்படுவேன் என்று கூறுவது சரியல்ல, வாய்ப்பு வருவதற்குள் தாயராக இருக்க வேண்டும் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..