என். ஸ்ரீராமின் கதைகளில் உலவும் எளிய விளிம்புநிலை கதைமாந்தர்களை வாழ்வில் பலமுறை தற்செயலாக சந்தித்து கடந்திருப்போம். அக்கதைமாந்தர்கள் தங்கள் வாழ்வின் நிகழ்வுகளையும், மகிழ்ச்சிகளையும், ஏமாற்றங்களையும் நினைவின் வழியாக வாசகரை கூட்டிக்கொண்டு போய் பெரும் திறப்பையும், பிரமிப்பையும் தங்கள் நிலப்பரப்பில் நிகழ்த்திக்காட்டுகிறார்கள். சிறுகதை கோட்பாடுகளான சிக்கனமான நடை, காலச்சுருக்கம் என எதுமின்றி, ஒரு வாழ்வினை முழுதாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தை அளிக்கக்கூடியவை என். ஸ்ரீராமின் கதைகள். இந்தக் கதைகளில் இயற்கை சித்தரிப்புக்கான மெனக்கெடல், வாசிப்பவருக்கு ஏகாந்தத்தையும் இயற்கையை இன்னும் நெருங்கி அணுகுவதற்கும் ஏதுவாகிறத