ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது.
நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்-களிடமும் பேசு-வதற்கு நிறைய வைத்திருக்-கிறார்-கள். அவர்களின் மொழி எனக்குக் கைவந்திருக்-கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று.
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
18ம் நூற்றாண்டில் பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியின் கவர்னராக இருந்தவர் துய்ப்ளக்ஸ். துய்ப்ளக்ஸிடம் மொழிபெயர்ப்பாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியவர் அனந்தரங்கர். ஐரோப்பிய அதிகாரிகளைப் போன்று அனந்தரங்கருக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. 1736 முதல் 1761 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்வுகளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். அவரது நாட்குறிப்பு தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக தமிழில் வெளியாகியுள்ளது.
பிரஞ்சு அரசின் காலனி நிர்வாகம், புதுச்சேரியின் அன்றைய வரலாறு பற்றி அறிந்து கொள்வதற்கு அனந்தரங்கரின் நாட்குறிப்பு ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. இந்த நாட்குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் தான் வானம் வசப்படும்.
இந்த நாவலின் சிறப்பாக நான் கருதுவது இதன் தனித்துவமான மொழி. 18ஆம் நூற்றாண்டின் தமிழை அப்படியே எழுத்தில் வடிக்கும் ஆற்றல் பிரபஞ்சனுக்கு வாய்த்திருக்கிறது.
மொழியின் ஆற்றல் கொண்டு வரலாற்றுப் பக்கங்கள் வாசகன் முன் விரிகிறது. அப்படி விரியும் போது தொடக்கத்தில் மொழி ஏற்படுத்தும் கடினத்தன்மை, பக்கங்கள் புரள்கையில் இலகுவாகி விடுகிறது. இருப்பினும் தொடக்கநிலை தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சற்று சவாலளிக்கக் கூடும்.
இந்நாவலில் அனந்தரங்கர் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். அவரது வீடு, அரிசி மண்டி, துய்ப்ளக்ஸின் கோட்டை போன்றவை கதை நிகழும் களங்களாக சொல்லப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் கலை வளர்ச்சியிலும், கோவில் நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றியவர்கள் தேவதாசிகள். அவர்கள் இந்த நாவலின் கதை நடக்கும் காலகட்டத்தில் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்குத் தள்ளப்படுவதை பதிவு செய்கிறது.
தங்களை உயர் சாதியினர் என்று சொல்லிக் கொண்டவர்கள் பிழைப்பிற்காகவும், அதிகாரத்திற்காகவும் ஐரோப்பியரிடம் சிரம் தாழ்த்தி பணி செய்கிறார்கள். பலர் தங்கள் வசதிக்காக மதம் மாறிக் கொள்கிறார்கள். குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களின் மதமாக கிறிஸ்தவம் இங்கு நுழைந்த போது நடந்த மாற்றங்கள் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது.
பிரஞ்சு கவர்னர் துய்ப்ளக்ஸின் மனைவி ழான் துய்ப்ளக்ஸ் பெரும் ஊழல்வாதியாகத் திகழ்ந்தவர். தனது கணவரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டி செல்வம் சேர்த்தவர். இந்திய சமூகத்தில் நிலவிய சாதி, மத பேதங்களை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதையும் விவரிக்கிறது இந்நாவல்.
வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக பதிவு செய்கையில் உண்மைகளைத் திரிக்காமல் படைப்பாளி தனது படைப்புச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வரலாற்று புனைவு வகை நாவல்களில் தமிழின் மிக முக்கியமான பதிவு வானம் வசப்படும்.
பிரபஞ்சனின் படைப்புகளில் நான் வசித்த முதல் நாவல் வானம் வசப்படும். 1740-50ல் புதுச்சேரி பிரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்த சமயத்தில் இந்நாவலின் களம் அமைந்துள்ளது. புதுச்சேரியின் கவர்னரான (இவரை குவர்னர் என்றுதான் எழுதுகிறார் பிரபஞ்சன். ஏன் என்று தெரியவில்லை) துய்ப்ளெக்ஸ் மற்றும் அவரின் சட்ட ஆலோசகராகவும், (கிட்டத்தட்ட) அமைச்சராகவும் (இப்பதவியை துபாஷ் என்று நாவலில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்) இருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை இருவருடைய உறவைப் பற்றி இந்நாவல் விரிவாக பல சம்பவங்களைக் கொண்டு சித்தரிக்கிறது.
நமக்குத் தெரிந்த சரித்திரத்தின் படி துய்ப்ளெக்ஸ் ராபர்ட் கிளைவின் எதிரி என்பதும் புதுச்சேரியில் பிரெஞ்சு அரசை ஸ்தாபிப்பதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் என்பதும் தெளிவு. இந்திய சிற்றரசர்களுடன் இவர் கொண்ட நிலையான உறவும், ஹைதர் அலியுடன் ஏற்பட்ட நட்பும் இவரது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியதாகவும் அது பிரித்தானியர்களை கலங்கடித்தாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த ராஜதந்திரங்களுக்கு பின்னே ஆனந்தரங்கப் பிள்ளையின் பெரும்பங்கு இருந்தது என்பதை நிறுவுவதே இப்படைப்பின் முக்கிய குறிக்கோள்.
"துய்ப்ளேக்ஸுக்கும் அவருக்கு பின்னரும் புதுச்சேரி அரசின் துபாஷாக இருந்த தமிழர் ஆனந்தரங்கப் பிள்ளை, குவர்னருக்கு அடுத்த அந்தஸ்த்தில் இருந்த பெரிய அதிகாரி. தமிழ் இலக்கிய நேயர். புலவர்களை ஆதரித்த பிரபு. இது அன்று அவரது பெருமை. தம் காலத்து அரசியல், சமூக நிகழ்ச்சிகளை 'டயரி'யாகச் சுமார் 25 வருஷ காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே அவரது பெருமை. 18ம் நூற்றாண்டு வெளிச்சம் பெற்றது, இந்த ஆனந்தரங்கப் பிள்ளையாலும், அவருக்கு அடுத்த வீரா நாயக்கராலுமே, ஆகும்." என்று முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார். இந்த முன்னுரையிலேயே இது ஆனந்த ரங்கரின் கீர்த்தியையும், சாதுரியத்தையும் துதிபாடும் படைப்பாக இருக்கக் கூடும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.
நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆனந்தரங்கரே அதிகமாகத் தெரிகிறார். கடினமான அரசியல் சிக்கல்களை தன அறிவுத்திறனால் தீர்த்து வைக்கிறார். துபாஷ் என்ற தனது பொறுப்புணர்ந்து, நீதி தவறாமல் நெறி வழுவாமல் குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு பணி புரிகிறார். இந்த ஒற்றை வரியை உணர்த்துவதற்காக பல்வேறு தனிப்பட்ட சம்பவங்கள் நாவலின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப் படுகிறது. சில இடங்களில் இது அலுப்பு தட்டவும் செய்கிறது. இது அத்தனைக்கும் அடித்தளமாக இருப்பது அவர் எழுதிய டயரிக் குறிப்புகள்.
டயரிக் குறிப்புகள் ஒரு தனி மனிதனின் பார்வையில் எழுதப்பட்டாலும் அது ஒரு வரலாற்று ஆவணமாக ஆவதை நாம் பல முறை கண்டிருக்கிறோம். அதற்கு உதாரணமாக ஆன் பிரான்க், சாமுவேல் பீப்ஸ், சார்லஸ் டார்வின் போன்ற பலரின் குறிப்புகளை கூறலாம். அவ்வகையில் வைக்கப் பட வேண்டிய முக்கிய ஆவணமாக ஆனந்த ரங்கரின் டயரி இருக்கக் கடவது. அக்கால பண்பாட்டு சூழலையும், மக்களின் நடத்தைகளையும் துல்லியமாக விவரணை செய்ததற்காகவே இப்படைப்பை நாம் படிக்கலாம்.
அக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் மதமாற்றம் எந்த அளவு மக்களின் மேல் திணிக்கப் பட்டது என்பதை பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் ஜாதி பேதங்கள் இருப்பதை காரணம் காட்டி விளிம்பு நிலை மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்ய விரும்பும் பிரஞ்சு பாதிரிகளையும், ஆனால் அதே போல் மதம் மாறிய உயர் ஜாதிக்காரர்கள் கிறித்தவத்திலும் ஜாதி பேதங்களை கொண்டு வந்ததையும் பல இடங்களில் இப்படைப்பில் காண முடிகிறது. இது ஒரு காலத்தின் போக்காக, வழக்காக நாம் கருத வேண்டும்.
குவர்னரின் மனைவியான ழான் (இதை படித்தாலே எரிச்சல் வருகிறது. அவள் பெயர் ஜ்ஷான் என்ற ரீதியில் சொல்லப் பட வேண்டியது. அனாவசியமான ஒரு "ழ"கரத்தை எப்போதும் நுழைத்து விடுகிறார்கள்) பிள்ளைக்கு எதிராக செயல்படுகிறார். அவள்தான் இந்தக் கதையின் வில்லி என்று பொருள் படுத்துக் கொள்ளலாம். ழானின் கொள்கை கிறித்தவத்தை இந்தியர்களிடம் பரப்புவது. கிறித்தவர்களுக்கு மட்டுமே அரசு ரீதியில் சலுகைகளும், கௌரவங்களும் தரப்பட வேண்டும் என்பது. அதற்காகவே இவள் ஒரு தனி அரசாங்கத்தை நடத்துகிறாள் சில அடிப்பொடிகளைக் கொண்டு.
நாவலின் பல இடங்களில் ழானை எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாக ஏசுகிறது. தங்களுக்கு நேரும் துன்பங்கள் அனைத்திற்கும் ழான் தான் காரணம் என்றும் அவளின் பேச்சைக் கேட்டுதான் குவர்னர் ஆடுகிறார் என்றும் மக்கள் அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதுவுமல்லாது எப்போதும் அவளை "முண்டை" என்று எல்லோரும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஒரு காழ்ப்பு அவள் மேல் இருப்பதாக நாவலில் கூறப் படுகிறது.
இவை அனைத்தும் பிள்ளையின் டயரி குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த ரங்கர் ஒரு உயர் ஜாதி இந்து. யாதவர்கள் என்று அழைக்கப் படும் வைணவ மரபை சார்ந்தவர். செல்வந்தர். அவர் குடும்பமே செல்வ செழிப்புடன் இருந்த குடும்பம். பரம்பரை பரம்பரையாக அரசாங்க துபாஷ் வேலை செய்து வருபவர்கள். அவ்வகையில் அவரது டயரியில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களும், அது கூறப்பட்டுள்ள தொனியும் அக்காலத்திய மனிதரின் ஒரு மன நிலை நின்று காண வேண்டும். மத மாற்றத்தின் மேல் அவருக்கு இருந்திருக்கக் கூடிய இயல்பான துவேஷமே அதில் பதிவாகியிருக்க முடியும் என்பது என் துணிபு.
அதேபோல் பெண்கள் வீட்டு வேலை செய்து கொண்டு கணவனுக்கு அனுங்கிப் போவதையே விரும்பும் ஒரு மனிதரால் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க விழையும் ஒரு பெண் திமிர் பிடித்தவளாகவும் "முண்டை"யாகவும் தெரியக் கூடும். இதுதான் பிள்ளைக்கு ழானின் மேல் ஏற்படும் ஒரு காழ்ப்புணர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். செல்வ செழிப்புள்ள ஒரு மனிதர், மேன்மை பொருந்திய தியாகச் செம்மலாக மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்பதும் ஏற்புடையதாக இல்லை. ஆனந்த ரங்கரின் மறுபக்கம் என்ன என்பது நமக்கு தெரியாமலேயே இருக்கிறது. நாவலும் அவருக்கு நாயகன் அந்தஸ்தை கொடுத்து உயர்த்திக் கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு இடத்தைத் தவிர. வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப் படும்போது மட்டுமே ஆனந்த ரங்கரின் வைணவ சார்பு பற்றிய கேள்வி எழுகிறது. ஒற்றை வரி மட்டுமே. அதற்கு மேல் அதை பெரிது படுத்தவில்லை எழுத்தாளர்.
வானம் வசப்படும் என்ற படைப்பு ஆனந்த ரங்கப் பிள்ளையின் டயரிக் குறிப்பை நகல் எடுத்தார் போல் அமைந்திருக்கிறது. தனித் தனியாக தொங்கிக் கொண்டிருக்கும் சம்பவங்களும், இடையிடையே புகுத்தப் படும் துணுக்குச் செய்திகள் போன்ற கதைகளும் நமக்கு இதையே மீண்டும் உணர்த்துகிறது. முக்கியமாக எவ்வொரு (பின் நவீனத்துவமல்லாத) நாவலுக்கும் உண்டான ஒரு மையக் கரு இந்நாவலில் இல்லை. சீரான அமைப்பின் மூலம் ஒரு புள்ளியை நோக்கிக் குவியாது எங்கெங்கோ சிதறிக் கொண்டே இருக்கிறது. கூடவே நமது கவனத்தையும் சிதறடிக்கிறது.
நாவலில் குறிப்பிடும் படி எந்த ஒரு உச்ச கட்டமோ, முடிவோ இல்லை. முக்கியமாக ராபர்ட் கிளைவ் வருகின்ற இடங்கள் நாவலின் உச்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வந்த வேகத்தில் கிளைவ் மறைந்து போய் வேறொரு சம்பவத்திற்குள் நாம் போய் விடுகிறோம். ஒரு அடிப்படை கதைக் கட்டு கொண்டு அமைந்திருந்தால் இந்த நாவல் படிக்க மேலும் ஏதுவாகவும், ஏன், அதி சுவாரசியமாகவும் இருந்திருக்கும்.
மொழி சார்ந்த எந்த ஒரு அழகோ, நுண்ணுணர்வோ இந்த நாவலில் இல்லை. எந்த ஒரு கதாபாத்திரத்தின் அக உணர்வோ, சிந்தனை ஓட்டமோ நாவலில் சித்தரிக்கப் படவில்லை. ஏட்டில் வெறும் எழுத்துக்களாய் இருக்கிறார்கள். இதுதான் இந்நாவலுக்காக எடுத்துக் கொண்ட பிரத்யேக மொழிபா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் எவ்வொரு நுண்ணுணர்வும் காணக் கிடைக்காதது வருத்தத்திற்குரியது. ஆனந்த ரங்கரின் டயரியை அப்படியே நவீனத் தமிழில் மீள் பதிவு செய்தது போல் உள்ளது.
வரலாறும் மாற்று வரலாறும் எவ்வொரு சூழலுக்கும் அதி முக்கியம் என்பது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றே. வரலாற்றுக் குறிப்புகளாய் விளங்கக் கூடிய படைப்புகளின் மூலம் ஒரு தொலைந்து போன சமூகத்தின் வாழ்கை முறை, அற நெறிகள், கலாச்சார குறியீடுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சமூகத்தில் மனிதர்களாய் நாம் அடைந்திருக்கும் (முழுவதாக அடைந்திருக்கிறோமா என்பது சந்தேகமே) பரிணாம முதிர்ச்சியை வரலாற்றை பின்னோக்கி பார்க்கும்போதே உணர முடிகிறது. அவ்வகையில் வானம் வசப்படும், நாவலுக்கு உண்டான அமைப்போ இலக்கியத்திற்கு உண்டான நுண்ணுணர்வோ இல்லாவிடிலும், நம் வரலாற்றின் ஒரு பக்கத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் முக்கியமான படைப்பாக கருத வேண்டும்.
எல்லாக்காலத்திலும் தமிழர்களுக்குள் நிலவி வந்த சாதி பாகுபாடு, மேல் சாதி என்று தங்களை அழைத்துக்கொண்டோர் அதிகாரத்தில் உள்ளோரை நக்கிப்பிழைக்கும் பண்பு, காலனிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மதத்திணிப்பு, தாசிகளின் நிலைமை போன்றவற்றை பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்ததனால் வானம் வசப்படும் is not an eye opener for me. மற்றபடி பேட்டி பண்ணிக்கொள்வது, சிரமபரிகாராம், குவர்னர், ழானம்மாள், அரசர் - அவர் நீடூழி வாழட்டும், அஞ்ஞானிகள் போன்ற பயன்பாடுகள் எப்போதும் நினைவுகளின் அடுக்குகளில் இருக்கும். 400 பக்க நாவலாக இருக்கலாம் வானம் வசப்படும் என்ற இரு வார்த்தைகளின் அடர்த்திக்கு ஈடாகுமா?
மானுடம் வெல்லும் கதையின் இரண்டாம் பாகம். 1700களில் வாழ்ந்த ஆனந்தரங்கன் என்னும் செல்வந்தரின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இக்கதை தமிழகத்தில் (அப்போது மாநிலப் பிரிவு இல்லாமல் கர்நாடகம் என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதி) நிலவிய அரசியல் சூழ்நிலையை மையமாகக் கொண்டது. பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் நவாபுகளும் மராத்தியர்களும் ஒன்றுக்கும் உதவாத குறுநில மன்னர்களும் மக்களின் மேல் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த மேற்கொண்ட செயல்களும், அவர்களுக்குள் நிலவிய உறவுகளும், இங்கிலாந்து பிரான்சு ஆகிய தேசங்களில் இருந்து கம்பெனியின் மூலம் வந்த அதிகாரிகள் ஊழலில் ஊறிச் செய்த சுரண்டல்களும் என பலவற்றை நாம் அறிகிறோம்.
அக்காலத்தைய அரசியல் நிலைமை மட்டுமல்லாமல் மக்களிடையே நிலவிய பழக்கவழக்கங்கள், கலாசாரம், அவர்கள் உண்ட உணவு வகைகள் ஆகியனவற்றையும் இக்கதை பேசுகிறது. பிரதான பாத்திரமான ஆனந்தரங்கர் Thomas Cromwell-ஐப் போல் தந்திரமாக மன்னருக்கு வலது கையாக செயல்படும் ஒருவர். இவரைச் சுற்றியே கதை வளர்கிறது.
மன்னர்களைப் பற்றியே வரலாறு வழக்கமாக நீளும் போது மக்களின் வாழ்வே பிரதானமானது என்று சராசரி மக்களின் கதைகளுக்கு பிரபஞ்சன் கொடுத்துள்ள முக்கியத்துவம் அக்காலத்தைய எழுத்தில் புதுமையானதாக இருந்திருக்கும். மன்னர்கள் ஆண்டாலும் சட்டம் ஒழுங்கு ஏதும் இல்லாமல் மக்களின் வாழ்க்கை தொடர் திருட்டுபயத்துடனேயே நகர்ந்திருப்பது, தீண்டாமை மற்றும் சாதீய வன்கொடுமைகள், மூடநம்பிக்கைகள் என்று தமிழ்நாட்டில் அக்காலத்து வாழ்க்கை பெரிதும் எளிதானதாக இருந்திருக்கவில்லை. இப்போதுள்ள நிலமையைப் போல் எளியவரை வலியவர் சுரண்டிப் பிழைத்திருக்கிறார்கள். "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் உண்மையான வரலாற்றை நோக்கினால் அதில் பெருமிதம் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை. மிகவும் பிளவுபட்ட, ஒற்றுமை இல்லாத, மனித உரிமைகளுக்கு மதிப்பு தராத, நிர்வாகத்திறன் இல்லாத கிணற்றுத் தவளைகளாகவே இருந்துள்ளோம்.
பிரபஞ்சனின் நோக்கம் பாராட்டத் தக்கதாகவே இருப்பினும், ஒரு நாவலாக வானம் வசப்படும் ���ுழுமை பெறவில்லை. ஓரளவுக்கு சுவாரஸ்யமாக கதை பயணித்தாலும், வாசிப்பு திருப்திகரமாக இல்லை. பாத்திரங்கள் எல்லாரும் தட்டையாக ஒரு பரிமாணத்திலே அடைப்பட்டுக் கிடக்கின்றனர். கதையும் நாட்குறிப்பு பாணியிலே செல்வதால் திருப்பங்கள் ஏதுமின்றி இலக்கிலா குதிரையைப் போல அங்குமிங்கும் அலைகிறது.
2000ங்களுக்கு முன் தமிழில் நாவல் என்று வெளிவந்த பலவற்றைப் போல இதுவும் நாவல் அல்ல. தொடர்கதை. தொடர்கதை வடிவால் கதையின் பாய்ச்சல் ஆங்காங்கே தடைப்பட்டு கொஞ்சம் கரடுமுரடான அனுபவமே நமக்கு ஏற்படுகிறது. சில இடங்களில் அத்தியாயங்கள் ஒழுங்கான வரிசையில் இடம்பெறாமல் கலைத்து வைக்கப்பட்டாற் போலவும் தெரிகிறது. முக்கியமான சம்பவங்கள் - போர், மரணம் - முதலியன ஏற்பட்டாலும் அவை அப்படியே மறக்கப்பட்டு (சில சமயம் எதிர்மறையான தகவல்கள் முன்வைக்கப்பட்டு) நாலைந்து அத்தியாயங்களுக்குப் பிறகே அவை மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலும் நேர்க்கோட்டிலே சொல்லப்பட்டிருக்கும் கதையில் இந்த பிறழ்வுகள் மிகவும் குழப்புகின்றன; கதைசொல்லியின் மேல் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகின்றன.
மக்கள் வரலாற்றை முன்வைப்பதாலும் நாம் அறியா சில உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாலும், எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருந்தாலும் ஒருமுறை வாசிக்கலாம். A light read.
புதுவையின் வரலாறு மட்டும் அல்லாமல் எப்படி நம் நாடு அந்நியர் வசம் சென்றது என்பதை மிக விரிவான நாட்குறிப்புபோல இருக்கிறது இந்த நாவல்.
நாவலினூடாக நம்மை ஆண்ட அதிகாரிகளின் மன நிலை மற்றும் அவர்களை போஷித்த நம்மவர்கள் பற்றிய தெளிவான சித்திரம் உள்ளது. அனந்த ரங்கர்தான் கதையின் மையம் என்றால் மிகையல்ல... சென்னையின் வளர்ச்சி மற்றும் எங்கள் சொந்த ஊரைப்பற்றிய விவரணைகள் மிக அருமை....
நாவலின் நடை மணிபிரவாள நடை என்கிறார்கள். மிக அருமையாக இருந்தது.
Wonderful book to read if anyone has interest on novels based historical events. It's Sahitya Akademi winner. This novel s based on a Daily dairy notes written by Dubash of Pondicherry in 18th century. Little big novel with more than 700 pages but reading it gives immense knowledge on the lifestyle & social structure of that era. Prapanjan sir effort taken for the writing the novel can felt immensely when reading it. I highly recommend it.