நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.
நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள்.