"தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.ஆனால்... ஆனால்... ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அலுவே அக்குலத்தின் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப் பெண்களின் கண்களைப் பார்க்கிறேன். அதில் நீதியில்லை," என்றவர் சூழ்ந்திருந்த பெண்களைப் பார்த்து காறி உமிழ்ந்தார்.