கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு முடிவற்று நீளும் மதில் மீது நேர்த்தியாக நடந்து செல்கிறது பூனை என்ற ஒரு சொல் ஆம் ஒரு சொல் அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால் அது ஒரு வாக்கியமாவதையும் வாக்கியத்தின் நீண்ட அசைவில் கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால் மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி கவிதையாவதையும் வாசிக்கலாம். அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்துபோவீர்கள்.