நான் புனைவுகளாலானவள். அவன் கோட்பாடுகளாலானவன். மாற்றம் என்பது மாறாதது என்ற அடிப்படை எதார்த்தத்தைவிட்டு நழுவிச் செல்பவன் ஓர் இயங்கியல் பொருள் முதல்வாதியாக எப்படி இருக்கமுடியும்?
நல்லவேளை, என் மனத்தையும் உடம்பையும் அவனிடமிருந்து நகர்த்தியே வைத்திருந்தான்.
ஆன்மீகத் தகவமைப்பு இல்லாதப் பொருண்மைச் சித்தாந்தம் முரட்டுத்தனமான சூன்யத்தை என்மீது கொட்டுகிறது.
கவிதை சுரக்காத கருத்தியலின் வறட்சியை என்னால் தாங்கமுடியாது.
போதையை நான் உடம்புக்காகச் சுகிக்கவில்லை; மூளையின் கிளர்ச்சிக்காகப் பருகுகிறேன்..
Nalla Paambu - Tale of blue godess..♥️