கண் விழிப்பதும், மயங்குவதுமாக மூன்று நாட்கள் ஆட்டம் காட்டியவள் அன்று நன்றாக கண்விழித்து, எழு.. மெதுவாம்மா என்று சொன்ன நர்ஸ் அவளை வசதியாக தலையணை வைத்து அமரவைத்துக் கொண்டிருக்க.. மகள் எழுந்துவிட்ட செய்தி கேட்டு வேகமாக அறைக்குள் வந்த வடிவழகி, அம்மாடி தேனு, என்று அழைத்தபடி ஆசையாக அவளை நெருங்க.. என்ன தேனா? யார் நீங்க என்ன ஏன் தேனுனு கூப்பிடறீங்க என்று கேட்க பயந்து போனார் வடிவழகி… என்னம்மா பேசற இங்க உன்னோட அம்மா அவங்கள பாத்து யாருனு கேக்கற? இல்ல சிஸ்டர் இவங்கள யாருனு எனக்கு தெரியல என்று சின்னவள் பயந்தபடி சொல்ல… நான் என்ன பண்ணுவேன்… யார்கிட்ட சொல்லுவேன்.. பத்து மாசம் சொமந்து பெத்த தாயப் பாத்து, யாருனு கேக்கறாளே, இந்த அநியாயம் எங்க நடக்கும்… என்று ஒப்ப