ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு.
தஞ்சாவூர் அருகில் இருக்கும் அஞ்சினி என்னும் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பள்ளர் இனத்தைச்சேர்ந்த கரமுண்டார்கள் குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது கதை. கரமுண்டார் வூடு அந்த காலத்திலேயே மூன்று அடுக்கு மாடிகளை கொண்டது அந்த வீட்டின் சமையலறை எப்போதும் அனைந்ததே இல்லை பள்ளர்களும் பறையர்களும் ஊர்மக்களும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த வீட்டில் உண்டு உறங்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கரமுண்டார் வீட்டில் ஆண் வாரிசு இல்லை தற்போதைய தலைமுறையில் மூன்று கரமுண்டார் களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. சந்திரகாசன் கரமுண்டார் மகள் காத்தாம்பள் என்பவள் தான் கதையை நமக்கு சொல்கிறாள். ஏன் வாரிசு இல்லை என்ற கேள்வியை பின்னோக்கிப் போனால் அது மங்கலம்பா என்னும் பெண்ணை சென்றடைகிறது வெஸ்லி துரை மங்கலம்பாளை புகைப்படம் எடுப்பதற்காக மங்களாம்பாள் தற்கொலை செய்து கொள்கிறாள் வெஸ்லி துரை கரமுண்டார்களால் படுகொலை செய்யப்படுகிறார். அதன் காரணமாகவே இந்த குடும்பத்தில் வாரிசு இல்லாமல் ஆனது என்று நம்பப்படுகிறது. ஒருபுறம் கரமுண்டார் வூடு தமிழில் வந்த ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றொருபுறம் ஜெயமோகன் போன்றவர்களால் இது வெறும் சரோஜாதேவி ஆபாச நாவலாக கருதப்படுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த நாவல் அப்படியானதொரு ஆபாசங்களை தேவையற்ற வர்ணனைகளையும் கொண்டு இருந்தாலும் இந்த நாவல் பேசியிருக்கும் பேசுபொருள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக ஒன்பதாம் அத்தியாயம் பத்தாம் அத்தியாயம் வாசிக்கும்போது தேவை இல்லாத கற்பனைகளை எழுதி இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் . ஒருபுறம் கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களின் உடல் வேட்கையும் தாங்கமுடியாத மோகம் கொப்பளிக்கும் உடலும் நாவல் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் அதே ஆண்களால் பெண்கள் எவ்வாறு தங்கள் காம இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டு உடலை கிழித்து எறிகிறார்கள் என்பதையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார் தஞ்சை பிரகாஷ். ( குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள்) இங்கே கைவிடப்பட்டு உடல் கேட்கையால் தவிக்கும் பெண்கள் நேர் எதிர்புறம் தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் காம வெற்றிக்காக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வாழ்வை எவ்வாறு சின்னாபின்னமாக ஆக்குகிறார்கள் இந்த கரமுண்டார் என்பதும் விரிவாகவே வருகிறது. திராவிடர் கழகம் அரசியலில் நுழைந்து ஜாதி ஒழிப்பு போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு அதன் விளைவாக அப்படியாக அடக்குமுறைக்கு ஆளாகும் பள்ளர் இனத்தில் புதிய தலைமுறையினர் எவ்வாறு வஞ்சகமும் காழ்பும் வஞ்சமும் கொண்டு அவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதே நாவலின் மீதி பகுதியாக இருக்கிறது. தமிழில் முதன்முதலாக ஓரினச்சேர்க்கையை பதிவு செய்தவரும் தஞ்சை பிரகாஷ் தான் என்று நினைக்கிறேன் காத்தாயம்பாளும் உமாமகேஸ்வரியும், காத்தாயம்பாளும் செல்லியும் உடலால் எரியும் இடங்கள் ஏராளம். நாவலின் மொழி தஞ்சை வட்டார வழக்கு மொழியில் இருப்பதால் உங்களை வெளியே உந்தித் தள்ளும் முயற்சித்தும் உள்ளே புகுந்து விட்டீர்கள் என்றால் அதன் மொழியும் அதன் சுவையும் திகட்ட திகட்ட அனுபவிக்கலாம். என்னைப்பொறுத்தவரையில் கரமுண்டார் வூடு தமிழில் குறிப்பிடத்தகுந்த ஒரு படைப்பாக என்றும் நிற்கும் என்பது என் கருத்து அதற்கான பேசு பொருளும் கட்டமைப்பும் இதில் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
பல ஊர்களில் இன்றும் ஏதோ ஒரு ஆதி கல் வீடு நின்று நமக்கு கதை சொல்லி கொண்டு தான் இருக்கிறது. மழை நாட்களில் அதில் ஒதுங்கி வாழ்ந்து மனிதர்கள் நம்மை அந்த தளத்தில் கொண்டு செல்வார்கள்!!! இன்னும் அந்த வீடுகள் மனிதர்கள் வாயிலாக தன்னை உயிற்பிதுகொண்டே தான் இருக்கின்றன..
சாதி, மக்கள், இவை எல்லாம் விட, பெண் சார்ந்த ஒரு வாழ்வு, பெண்ணின் அக வாழ்வு, அவர்கள் மீது நடத்தபடும் அரசியல், ஆணி வேராக இருக்கும் வூடுகள். நூறு வயது அப்பாயிகள் தான் இங்கே ஆட்டுவிக்கும் காரணி....
காத்தாயம்பாலை கடவுளாக பாவித்து நடக்கும் சம்பவங்கள், அதன் ஊடக பல சிந்தனைகளை நம்மில் கேள்விகளாக எழ செய்யும்!
பேச படதா பொருள் ஒன்று, யாவும் பேசு பொருள் ஆக இருந்தது இந்த நாவலில்.
காவிரி நீரில் உண்டு, பருகி, லயித்து, மாண்டு, வதங்கி, மூங்கி, தாத்தலித்தேன்...
சாதி சார்ந்த பதிவுகள் நாம் விவதா பொருளாக தான் எண்ணுகிறேன்... பெண்களின் சுழல் எங்கும் யாவிலும் உயிர்ப்புடன் இருக்கிறது..
புயல் காற்று, வெள்ளம் , தென்றல், மௌனம் எல்லாம் தந்து போன்ற உணர்வு...
வாசிக்க வாசிக்க நம்மை சூழலில் உள்வாங்கும் தன்மை தான் இந்த புத்தகம்!!
This wasn't my cup of tea. I was expecting a book which shows the life old Tanjur and its social systems. I just didn't get a feel of any of those things. Too much unnecessary adult content and too little story. If the author's aim was to show how a woman is treated, I would say he has failed in highlighting it among other things. Even after finishing the book, I still had the feeling of "என்ன தான் சொல்ல வராங்க?" I did see some good reviews for this book but I just don't get it! I don't see one good thing in this book.
ப்பா..ஆஆஆ..என்ன ஒரு write-up. விரைந்து வாசிக்க தூண்டிய இந்நாவலை எழுதிய "தஞ்சை பிரகாஷ்" அவர்களுக்கு நன்றி!!!
உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டதாக கூறப்படும், இந்நாவலின் களம், காலம்., தஞ்சை 'அஞ்சினி' கிராமமாகவும், 80களின் இறுதியில் நடைபெறுவதாகவும் இருக்கிறது.
புத்தக தலைப்பாக, கரமுண்டார் வீடு என்பதற்கு பதிலாக, ஏன் கரமுண்டார் 'வூ'டு என்பதற்கான விடை முதல் பக்கத்திலேயே கிடைத்துவிடும். ஆம்; நாவல் முழுவதும் வட்டார பேச்சு வழக்கு கையாளப்பட்டுள்ளது.
பெரும்பாலும் , வட்டார வழக்கில் உள்ள நாவல்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்பதாக நினைத்ததுண்டு. ஆனால், இந்நாவலை வாசிக்கையில் அப்படி தோன்றவில்லை.
கள்ளர் சமுதாயத்தை சார்ந்த கரமுண்டான் குடும்பம், அதாவது பல கிளை குடும்பங்கள் வசித்து வரும் வீடுதான் பிரதான கதைக்களம். எட்டு கட்டு வீடு, பின் கட்டை தொட்டுச்செல்லும் காவிரி, அஞ்சினி கிராமம், அச்சமுகங்களின் வாழ்வியல் என கதையின் போக்கு உள்ளுக்குள்ளேயே சுழல்கிறது.
கள்ளர்/பள்ளர் என வேறுபட்ட சமுதாய வகையறாக்கள் இருந்தாலும் அச்சமுக மக்கள் ஒன்றுக்குள் ஒன்றாக, அதாவது "அவன்/அவ எங்க வூட்டு பள்ளனாக்கும்/பள்ளச்சியாக்கும்." என சொல்லுமளவிற்கும், அதேபோல் "ஆண்டே...ஆண்டே" எனச்சொல்லி மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வதும் என ஒன்றொடு ஒன்று பின்னி பிணைந்து வாழ்வதாக காட்டப்படுகிறது.
என்றாலும், பெண்களை மாறி மாறி கவர்ந்து அல்லது அவர்களாகவே செல்வதும், அத�� தொடர்ந்து ஏற்படும் சாதி கலவரங்களும், அதனை தொடர்ந்து ஏற்படும் பலிகளும், பின் இரு சமுக மக்களும் அதிலிருந்து மீண்டு சுமுகமாய். வாழ்வதுமாய் கதை முடிகிறது.
இதில், முக்கியமாக சொல்லபடவேண்டிய விஷயமாக, கரமுண்டான்களின் பலதார மணம், ஆனால் அந்த முடிவையும் அப்பெண்களே எடுக்கிறார்கள். ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதற்கேற்ப எந்தகாலமானலும் எந்த ஒரு பாதிப்பிற்கு(impact) பின்னும் பெண் இருக்கிறாள் என்பதாகவே உணரமுடிகிறது.
மெல்லிய Lust நெடியுடன் பயணப்படும் கதை. NonLinearஆக முன்னும் பின்னும் போனாலும், கதையை புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை.
மேலும், மேற்சொல்லபட்ட சமுகங்களின் வாழ்வியல் முறையை எந்த சமரசமும் இல்லாமல், வெகு இயல்பாக, மிக நேர்த்தியாக பதிவு செய்யப்படிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
தஞ்சாவூரில் ஒரு பகுதியினர் எப்படி சாதிய சமூகத்தால் பிணைக்கப்பட்டு வாழ்ந்திருந்தார்கள் என்பதை சலிப்படையமால் நமக்கு கடத்துகிறது கரமுண்டார் வூடு ... கள்ளர், பறையர்,பள்ளர், பிராமணர் என கலந்து வாழ்கிறது அந்த சமூகம் ...ஆதிக்க சமூகம் தலை முறை தலைமுறையாக மற்றொரு சமூகத்தை அடிமைபடுத்தி வேலைவாங்கி அந்த சமூகத்தில் நினைக்கும் பெண்களிடம் எல்லாம் களவு கொண்டு இவ என் பள்ளச்சி என அதிகாரம் செலுத்துகிறது...அடிமையாக இருக்கும் சமூகமோ அதை அடிமை என கருதாமல் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறது...ஆண்டே நீங்கதான் எங்களுக்கு எல்லாமே, நான் எப்பவும் உங்க பள்ளச்சிதான் ,ஆதிக்க சமூகத்தில் கொலை செய்த ஒருவனை எந்த சூழ்நிலையிலும் காட்டிக்கொடுக்காமல் இருத்தல் இவையெல்லாம் அவர்கள் ஆதிக்க சமூகம் குறிப்பாக ஒரு பெரிய குடும்பத்தினிடம் எப்படியான ஒரு பிடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள் என நமக்கு உணர்த்தும் ...அதிமுக, திமுக ,காங்கிரஸ் இவைகள் வருவதும் சாதி இல்லை என கூவுவதும் அனைவரும் சமம் என பேசி ஓட்டு வாங்குவதும் காலம் காலமாக அவர்கள் அப்படியே எதும் மாறாமல் வாழ்வதும் என அரசியலை அப்படியே போகிற போக்கில்ஆழமாக பேசிவிடுகிறார் தஞ்சை பிரகாஷ் ... இந்த உடல்தான் எத்தனை வன்மையானது ...ஆண் பெண் பேதமின்றி இந்த உடல் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது...இதன் விளைவுதான் இந்த கதையில் வரும் தெலகராஜீ, காத்தாயம்பா, உமா மகேஸ்வரி, மாஞ்சி, ரங்கம், மாயி, சோணை, நாச்சி, கலியன் இவர்களது உறவு.... காத்தாயம்பாளை கல்யாணம் செய்து இந்த சமூகத்தை மாற்ற நினைக்கும் தெலகராஜீ பின் அவர்களிலே ஊறிப் போன கள்ளன் ஆகிறான் ... ஆதிக்க சமூகத்தை பழிவாங்க, உரிமையை நிலை நாட்ட நினைக்கும் கலியன் காத்தாயம்பாளோடு கரைந்து போகிறான் ... இந்த உடல் இதில் இருக்கும் ஒவ்வொன்றும் தெலகராஜீக்கானது என வாழும் காத்தாயம்பா கலியனிடம்தான் பெண்ணாக வாழ செல்கிறாள்.... பெண்ணாக அல்லாமல் தெய்வமாக காத்தாயம்பாளை நடத்திய அந்த சமூகம் பிற்காலத்தில் அவளை முழுதும் மறக்கிறது... ஆரம்பித்தில் இருந்தே முதன்மை கதாப்பாத்திரமாக வரும் காத்தாயம்பாளும் , பிற்பாதியில் மறைந்து போகிறாள் ...
தஞ்சை வாழ்வியல் , ஆண் பெண் உறவு , உடலின் செயல்பாடும் அதனால் மனம் கொள்ளும் விளவும் இதையெல்லாம் வைத்து அழியாத வீடாக கரமுண்டார் வூட்டைக் கட்டி இருக்கிறார் தஞ்சை பிரகாஷ்
நாம் படித்து , கேட்ட கதைகள் எல்லாம் "ஒரு ஊர்ல " என்று ஆரம்பித்து ஒரு வீட்டில் உள்ள ஆட்களையோ அல்லது ஒரு ஊரையோ பற்றி பேசும் . ஆனால் கரமுண்டார் வீடு நாவல் , வீடு என்று ஆரம்பித்து ஒரு சமூகத்தையே நம் கண் முன் (மனக்கண் ) கொண்டு வந்து நிறுத்தி , அதனுள் நம்மை கடத்துகிறது . இந்திய சமூகம் அதுவும் குறிப்பாக இந்து சமூகம் பெண்களால் கட்டமைக்கப்பட்டதா என்றால் சந்தேகம் தான் ஆனால் பெண்களை சுற்றி தான் அது கட்டமைக்கபட்டிருக்கிறது என்பதனை பட்டவர்த்தமாக சொல்லும் நாவல் இது . பெண்களின் உணர்ச்சிகளை , உணர்வுகளை , ஆசாபாசங்களை இந்த நாவல் விவரித்தது போல் இவ்வளவு விரிவாக தமிழில்( எனக்கு தெரிந்தவரை ) வேறு எந்த நாவழும் இந்த அளவு வெளிப்படையாக பேசியதில்லை . பெண்களை சுற்றி கட்டப்படும் சமூகம் எப்படி பெண்களை போற்றியவாரு அவர்களை ஒடுக்குகிறது என்பதை தெள்ள தெளிவாக இந்த நாவல் பேசுகிறது . பொழுதுபோக்குக்கு படிக்கும் வாசகர்களுக்கு சற்றே கடுமையான நடையாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பாளர்கள் பெரிதும் ரசிக்கும் வண்ணம் எழுத்து நடையை அமைத்திருப்பது எழுத்தாளரின் திறமையை பறைசாற்றுகிறது . நிறைய விஷயங்கள் , நிறைய இடங்களில் மீண்டும் மீண்டும் வந்த போதும் போதும் பெரிதாக தொய்வு என்கிற ஒன்று இல்லாத நாவல் இது . சில நாவல்களை படித்து முடித்து புத்தகத்தை முடிய பின் கதை என்னவென்பதே மறந்துவிடும் . காத்தாயம்பா , திலகராஜு , செல்லி , உமா மஹேஸ்வரி என்று நெஞ்சம் முழுக்க கதாபாத்திரங்கள் நிறைய விட்டு நம்மை அவர் உலகத்திலிருந்து விடுவிக்கிறார் ஆசிரியர் . இந்த நாவல் பெற வேண்டிய வெளிச்சங்களை ஏன் பெறாமல் போனது என்பது வியப்பாகவே இருக்கிறது . தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் . பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் இந்த கரமுண்டார் வீடு . தமிழ் மக்கள் கண்டிப்பாக படித்து பாராட்ட வேண்டிய புத்தகம் இந்த கரைமுண்டார் வீடு .
கரமுண்டார் வூடு படிக்க வேண்டும், என்ற நீண்ட நாள் ஆவல் இன்று நிறைவேறியது . ஒரு பெரும் கள்ளர் பரம்பரையின் விழுமியங்களை விலாவாரியாக சித்தரிக்கும் மனம் நெகிழ வைக்கும் சரித்திரம். கதாபாத்திரங்களுடன் மனது ஒன்றி வாழ்ந்து முடித்தது போல ஒரு உணர்வு.பிரமை.மிக அருமை.