இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தையே உமிழும்போலும். நமது வாழ்வின் அலைகளில் ஒன்றில் உருவான ஒரு மிடறு விஷமும், அமுதமும், உதிரமும் இந்நாவலில் உள்ளது. இதன் எளிய கதை நகர்வின் உள்ளே பற்பல உள்ளோட்டங்களும் சிக்கல்களும் இருக்கின்றன.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
எங்கே எப்படி ஆரம்பிப்பது என்பதின் குழப்பம். புனைவுருவாக்க கதை என்பதன் அசுவராஸ்யம் என்னை அறியாமலே என்னுள் தொற்றி விடுகிறது. காரணம் மெய்த் தன்மை, எழுத்தாளர்களின் எண்ணங்களை வலிந்து திணித்தல், அதீத புனைவுத் தன்மை இவையாவும் கதையின் அல்லது நிகழ்வின் தீவிரத் தன்மையை குலைத்து விடுவதே.
ஜெமோ என்ற பலம் மட்டுமே கதையை வாசிக்க வைத்தது. இளம் ப்ராய தொடக்க காதல், பெண்ணதிகாரம், பெண்ணடிமைத்தனம்,பாலியல் மீறல்கள், கூட்டு பாலியல் வண்புணர்வு, சினிமாத் தொடர்புபின்னணிகளால் தொகுக்கபட்ட புனைவு.
வரும் பெண் பாத்திரங்களை பற்றிய ஒரு ஓட்டம். கணவனை எதிர்பார்க்கும் ரமணியும், விமலாவின் பார்வையில் ஆண்கள் வெறும் பாலியல் தேவைக்கானவர்களாக (அதற்கு அவளிடம் நியாமான காரணங்கள் இருக்கத்தான் செய்தது) , பிரவீணா படித்த சினிமா தொடர்பு கொண்ட குறிக்கோளிற்காய் எதையும் செய்யும் எண்ணம் கொண்டவளாக , சினிமாவில் சாதித்த ஷைலஜா என 4 முக்கிய பாத்திரங்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எல்லாம் ரவி என்ற இயக்குநர் மூலம் ஒரே புள்ளியில் சேர்த்து விளையாடப்படும் விளையாட்டே கதை.
பெண் வெறும் பாலியல் தேவைக்கான சதைப்பிண்டங்களா ஆம் அப்படித்தான் என்கிறார் ரவி . இலக்கிய அறிவு, படிப்போ தன் முன்னிருக்கும் போது எந்த மனிதத்தையும் தானாக பாவிக்க முடிவதில்லை.
பள்ளியிலோ, வாழ்விலோ , பணியிலோ, பெண் என்று வரும் போது ஒவ்வொரு ஆணுக்கும் உரித்தான தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம், பயம், பொறாமைளால் எழும் போலி உருவாக்கத்தில் அதிகாரத் தொனி, அகங்காரம் ஏளனம் இவற்றால் கட்டுவிக்கப்பட்டு தன்னை மறைத்த ஓர் அடையாளத்தை தன்னியல்பை சமூகத்திற்கு காட்டும் ஆளுமை ஒரு போலி என்பதை அவனால் அறிய முடிவதேயில்லை.
ஆண்களில் நிகழும் இவையனைத்தும் தற்காலிகமான போலி உருவங்களே, சரியோ தவறா என்பது நிகழும் சூழ்நிலைக் கேற்ப அவரவரே தீர்மானித்து விடலாம். நிகழ்தல் முடிந்ததும் மீண்டும் அது போன்ற நிகழ்தல் மனித வாழ்வியலில் இல்லை. அதன் பின் விளைவுகளும், அது தொடுக்கும் அஸ்திரங்களும் அதை எதிர் நோக்கி காத்திருப்பது மட்டுமே.
எப்படி, எப்போது என்பதெல்லாம் காலம் காத்திரமாக நிகழ்த்தி கொடுத்து விடும். கன்யாகுமரி அதன் முடிவை எதிர்பாராத விதமாக நிகழ்த்தி முடித்திருப்பது சிறப்பு. ஷைலஜா , ரமணி கதாபாத்திரங்களுக்கு அதீத அழுத்தமில்லை. வெறும் கதைகளுக்கான ஒப்பேற்றல்களாக தோன்றுகிறார்கள் எனக்கு. மீதி இரண்டு (விமலாவும், பிரவீணாவும் ) பாத்திரங்கள் அதீத அழுத்தத்தை ஒவ்வொரு ஆண் மனதிலும் கொடுத்து தம்மை முன்னிருத்தி நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரு ஆணின் மனத்தின் சிறுமைகளும் கீழ்த்தர எண்ணங்களையும் தெளிவாக காட்டுகிறது.
ஒரு ஆண், தன்னை நிராகரித்த பெண்ணின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாக தோன்றினாலும், அது இயலாமையை தாண்டி வேறு என்னவாக இருக்க முடியும்?
பெண்கள் எளிதில் கடக்கும் புதினங்கள் ஏன் ஆண்களின் மனதில் பதிந்து புலுங்குகிறது?
இதற்கு ஆயிரம் justification கூறப்பட்டாலும், அது அவன் கொண்டுள்ள insecurity மற்றும் அகந்தை (ego) என்பதற்கே சமம்.
Novel written on Kanyakumari backdrop. If you ever been to Kanyakumari, you will feel the landscape and its sea's deepness.
Must give a read which talks about the real femininty and woman's issues in modern world
காலம் காலமாக பூஜிக்கப்பட்டு வந்த சில உதற வேண்டிய கற்பிதங்களை வீட்டுக்குள் நுழையும் போது தன்னிச்சயாக நழுவவிடும் செருப்பு போல கழட்டிவிடும் ஒரு நாவல். இந்த விமலா தனக்கு நேர்ந்ததை, “சில நேரங்களில் சில மனிதர்கள்” கங்கா போல பாறாங்கல்லாய் சுமந்து அலையவில்லை. “கரையோர முதலைகள்” ஸ்வப்னா போல வஞ்சம் கொண்டு முதுகில் கத்தி ஒளித்தபடி தவம் செய்யவில்லை. ஒரு தற்கொலை முயற்சியோயோடு (அதுவும் கண்டிப்பாக தப்பித்துவிடுவோம் என்று தெரிந்தே) தன்னை தொகுத்தெடுத்து குன்றில் ஏறி அமர்ந்து கன்னியாகுமாரி ஆகிறாள்.
இங்கு ரவி போன்று ஒரு கதாபாத்திரம் வழியே நாம் பிரவீணாவையும் விமலாவையும் பார்ப்பது எந்த ஆணுக்கும் litmus test தான். தன் குற்றஉணர்ச்சியையும் கையாலாகாத்தனத்தையும் உருட்டி உருட்டி தங்கமாக்கி தன் உச்ச படைப்பாக ஒரு படம் எடுத்தபின் பிச்சைக்காரனாக ரவி.. அவனுக்கும் ஸ்டீபன்க்கும் பிச்சையிடும் அன்னபூரணியாய் விமலா விஸ்வரூபம் எடுக்கும் அந்த இறுதி பக்கங்கள்….
அந்த பாறையும், காற்றும், கசகசப்பும், அலைகளும் மேல் படர கலயமுடியா நினைவகளுடன்…. கன்னியாகுமாரி
நன்றி - பர்வீன் சுல்தானாவின் கதைப்போமா with ஜெயமோகன்
Whenever I read Jeyamohan, I feel like I’m growing as a reader. His characterization is exceptional, especially how he confronts the ego of male readers. It’s a raw truth that many men, when unable to win over a woman, often resort to abusing her or doing something cruel—exposing a harsh side of human nature.
The portrayal of Ravi, once a successful director now struggling for hits, was deeply compelling. And the climax? Brilliantly crafted—open to interpretation whether he’s dead or still trapped in his dreams.
கன்னியாகுமரியின் தேவியான விமலா என்ற பெண் தன் உடலால், காதலால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட போதிலும் அறிவின் துணைக் கொண்டு சராசரிகளின் ஆட்டத்தில் இருந்து விடுபட்டு வெற்றி காணும் கதை.
எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் நாம் மீண்டு வர ஊசியின் முனை அளவு கூட வழி இருக்கும், நாம் மீண்டு உயர்ந்த வேறு ஒரு களத்தில் நாம் வாழமுடியும் என்று விமலா வின் கதை சொல்கிறது.
கோழைத்தனம் கொண்ட, கையாலாகாத, ஆண் திமர் கொண்ட, ஆணவம் கொண்ட ரவியின் பார்வையில் கதையை படிக்கும் போது என்னை அவ்வப்போது சுட்டது இக்கதை. ஆனால் என்னிடம் கேள்வி கேட்டு என்னை யோசிக்க வைத்து ரவியைப் போல கைவிடப்பட்டவனாய் நான் ஆகாமல், என்னை நிலை நிறுத்த உதவியது இக்கதை.
கன்னியாகுமரியிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது சப்ளிமேஷன் (sublimation - எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் நாம் மீண்டு வெளியேறி நேர்வழி படுத்த உதவும் நம் உள ஆற்றல்)
பிடித்த மேற்கோள்: கற்பனை செய்றப்ப இருக்கிற பயங்கரம் உண்மைல நடக்கிறப்ப இல்லை. நடக்கிறப்ப இருக���கிற பயங்கரம் நடந்து முடிஞ்சபிறகு இல்லை. - ஜெயமோகன்
Kanyakumari is a novel about one losing one's pristine purity. Here I would like to define what I mean by ones purity; it is not the physical purity; its the spiritual purity that is innate to every human being. The novel's central character Ravi is a famous film director; He is searching for a new film to redeem himself. He is staying in the city of Kanyakumari with an aspiring actress Praveena who also is in a sexual relationship with him. Ravi chances upon his yesteryear college lover Vimala while staying in Kanyakumari. This meeting brings upon him a series of reflections on his past. They had shared a love relationship in the past and a traumatic incident has separated them. In a moment of utter baseness Ravi had ditched his lover and went on with his own life. This moment of baseness from the past is a thorn in his soul, like a drop of poison that continues to consume him. He is endlessly tormented; his relationships with all the women in the novel are superficial; he is perennially dissatisfied with all of them. It seems he has lost the ability to derive love from a woman. His sexual encounters with Praveena are barren, in a futile manner, like a man searching for something lost else where he constantly tries to win over Praveena. She is aware of his pretensions and torments him through her candidness. Ravi plans to meet Vimala to embarrass her and see how she will react to their past in the presence of her lover. Vimala seems to have overcome the past splendidly; she is nonchalant about her past, openly speaking about it to Praveena and Ravi. She is a completely changed person, a scientist in the USA she has dedicated her life to the pursuit of science. This coolness angers Ravi, in a very cruel episode; he even makes the unthinkable by making the person who had physically molested Vimala when Ravi and Vimala had visited Kanyakumari in the past. Even then, Vimala extends her warmth and help to the molester. Completely defeated Ravi returns back to find Praveena and the team ditching him. In a poetic ending he finds in a dream that the kanyakumari goddess is empty in the shrine. The goddess has left, and he is filled with hatred and contempt towards himself.
The novel is, in a sense , tragic modern humans are given the chance to choose their own lives and they can tragically ruin it.