காசு கொடுத்துக் கிளியைப் பேசச் சொல்லும் நமது உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது 'ஏழுதலை நகரம்'. அங்கே இயல்பாகவே பேசும் பறவைகள் வாழ்கின்றன. அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாராசியங்களும், அழகிய புதிர்களும் சாகசங்களுமாய் நீளும் ஏழுதலை நகரத்துள் நுழைந்துவிட்டால் பெரியவர்கள் கூட குழந்தைகளாகிவிடவேண்டியதுதான்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
'ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு வானம் உள்ளது. ஒன்று போல இன்னொன்று இருப்பதில்லை. இந்த வானம் என்னுடையது.'
'எஸ்.ராமகிருஷ்ணன்' எழுதிய 'ஏழுதலை நகரம்' நாவலிலிருந்து…
எந்தவொரு சிறார் இலக்கியமும் சிறுவர்களுக்காக மட்டுமே எழுதப்படுவதில்லை. அது தனக்குள் இருந்த சிறுவனை தொலைத்த பெரியவர்களுக்காகவும் எழுதப்படுவது என நான் நம்புகிறேன்.
மீபுனைவு (Fantasy) கதைகளில் எதை வேண்டுமானாலும் பேச வைக்கலாம். நாம் கவனிக்காத பொருட்களின் இருத்தலின் நியாயத்தையும் சிந்தித்து பார்க்கலாம்.
அவ்வகையில் மிகச் சிறந்த, வியக்க வைக்க கூடிய ஒரு மாயாஜால கற்பனை உலகை உருவாக்கி இருக்கிறார் எஸ்.ரா.
யதார்த்தத்திலிருந்து சிறிது நேரம் ஓய்வு வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நாவலை வாசிக்கலாம்.
என்ன தான் 'fantasy' ரகக் கதையாக இருந்தாலும், குழந்தைகளுக்கான நாவலாக இருந்தாலும், கதையில் சிறிது தெளிவும் நேர்த்தியும் வேண்டும்... (ஜெயமோகன் அவருடைய பனிமனிதன் நாவலில் செய்திருப்பதை போல)
அவ்விரண்டும் இக்கதையில் இல்லை...
எஸ்.ரா'வின் கற்பனைகளின் உளறல்கள் என்று குறிப்பிடலாம்... கதையிலும் எழுத்திலும் அவ்வளவு naivety...
Maybe he has done better works later, considering this was one of his earliest fiction for Children.. Definitely not recommended..