நவீன ஓவியர்களைப் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் விரிவான தனது ரசனையைப் பதிவு செய்திருக்கிறார். உலகின் மிக முக்கியமான கலைக்கூடங்களுக்கு நேரில் சென்று ஓவியர்களைக் கண்டுவந்த எஸ். ராமகிஷ்ணனின் தேடுதலின் வெளிபாடே இக்கட்டுரைகள்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
கலை, அதிலும் ஓவிய கலை பற்றியான புத்தகம். வான்கோ, பிகாசோ மட்டும் தெரிந்த எனக்கு, பீட்டர் புரூகேல்,லாட்ரெக், ரிவேரா,கிளம்ட்,காகின்,நஜி அல் அலி, ஹென்றி ரூசோ போன்ற நவீன ஓவியர்களின் உலக புகழ்பெற்ற ஓவியங்களை பற்றியான அறிமுகம் கிடைத்தது. நவீன ஓவியம் குறித்து நம்மிடையே தவறான கருத்து இருக்கிறது அவை வெறும் கிறுக்கல்கள் என்று தவறாக நினைக்கிறோம், கண்முன்னே உள்ளதை அப்படியே வரைவதுதான் ஓவியம் என்ற தவறான புரிதல் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அது அப்படி அல்ல ஓவியங்கள் குறித்து நமது கண்ணோட்டத்தை மாற்றவே எஸ்.ரா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்
People use art to explain each other their feelings - Leo Tolstoy
என் நண்பன் என்னிடம் அடிக்கடி கேட்கும் விஷயம் ஒன்று இருக்கிறது . கலை அதிலும் ஓவியக்கலையை ஒருவரால் எவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ரசிக்க முடிகிறது என்று . அவனின் வாதம் என்னவென்றால் கலையை உணரும் மனம் ( அவனை பொறுத்தவரை கலையை மூளை உணர்ந்தால் அது ரசிப்பவன் செய்த பாவம் ) முதல் முறை அடையும் அனந்தத்தை கண்டிப்பாக அடுத்த முறை அனுபவிக்க முடியாதே , பிறகேன் கலை பொருட்களை முக்கியமாக ஓவியங்களை இத்தனை ஆயிரம் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றே இருக்கும் . எனக்கு தெரிந்த முறையில் அவனுக்கு புரிய முயற்சி செய்த போது தான் எனக்கு தெரிந்தது , முதலில் புரிந்து கொள்ள வேண்டியவன் நான் தான் என்று . என்னுடைய ஓவிய கலை ஞானத்தை தேடி அலைந்த போது கிடைத்த புத்தகம் தான் இந்த பிக்காஸோவின் கோடுகள் . எனக்கான ஓவிய ஞானத்தை , என் நண்பனுக்கு நான் சொல்லி புரியவைக்குமளவு அறிவினை இந்த புத்தகம் தந்தா என்றால் கண்டிப்பாக இல்லை . இந்த புத்தகம் ஓவிய கலையை அறிய ஆசைப்படும் வாசகனின் கைப் பிடித்து சரியான பாதையில் இழுத்து செல்கிறதா என்றால் , சந்தேகம் தான் என்பதே என் பதிலாயிருக்கும் . தமிழின் சிறந்த எழுத்தாளர் ஒருவரின் புரிதல் அல்லது அவர் புரிந்ததை நமக்கு தெரிவிக்கின்ற விடயம் இவ்வளவு சிக்கலாக இருக்கிறதென்றால் , சராசரியான நான் ஞான சூனியமாய் இருப்பதில் பெருங்குற்றம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை . ஓவியக்கலையை புரிந்து கொள்ள , அதை உணரு முற்படும் என் பயணம் தொடரும் . ஒருவேளை அந்த பயணத்தில் நான் வெற்றிபெற்று என் பயணத்தை நான் திரும்பி பார்த்தால் இந்த புத்தகம் என் நினைவில் கண்டிப்பாக இருக்காது .
This book gives great ideas to know about paintings that are famous and existing through out the world. When I started reading this book I was completely new to painting world and this book broadened my knowledge on painters and their art works. This book provided great insight on how to look at art work and it holds many number of movie references and books published based on the painters. Great way to start learning about paintings.