கொங்கு மண்ணில் திருமணமாகமல் வாழும் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்கும் மேலிருக்கும் முதிர் கண்ணனின் முழு வாழ்க்கையை சொல்லும் கதையிது. பெற்ற தாயுடனான பாச நிகழ்வுகளையும், தானும், தன்னைப்பொன்ற முதிர்கண்ணன்களின் வாழ்வும் இந்த மண்ணில் இவ்வளவு சோகங்களுக்கு இடமானதா? என தன்னை முன்னிருத்தி புனையப்பட்ட நாவல். புதுமைப்பித்தன் நாவல் போட்டியில் வென்ற நாவல்!
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.