உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;
சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி ❤️ • கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2023 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மூன்றே வரிகளில் மனதை இழுக்கும் மாயக் கவிதை வடிவமான இக் ஹைக்கூக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாய் விளங்குகின்றன. இயற்கையின் இயல்பு அல்லது சாதாரண நிகழ்வுகள் சார்ந்து அமைவதோடு ஆழமான அர்த்தங்கள் செறிந்ததாக அமைவதுமே இவற்றின் சிறப்பு.