'பாசிசம்' என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, தான்தோன்றித்தனம், ஆதிக்கவாதம், முழுமைவாதம், சர்வாதிபத்தியம், நாசிசம், சாதியவாதம், இனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற பற்பல சொற்களின் உட்கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.
சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான களப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர், மனித உரிமைச் செயல்பாட்டாளர். உலக சமாதானம், அகிம்சை, வருங்காலவியல், நீடித்த நிலைத்த வளர்ச்சி போன்ற பாடங்களில் வருகைதரு ஆசிரியராக உலகின் பல பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிப்பவர். இவரின் தமிழ் நூல்களுள் சில: ‘அணு ஆட்டம்’, ‘அசுரச் சிந்தனைகள்’ (தொகுப்பு), ‘தகராறு’, ‘புயலுக்குப் பின்னே பூந்தென்றல்’ (காலச்சுவடு வெளியீடு).