கீழே இறங்கிய மேக்னா, தரையில் இருந்த பூக்களை பார்த்ததும், தன் ஹைஹீல்ஸ் செருப்பை கழற்றினாள். திலீப் அதை சற்றும் யோசிக்காமல் வாங்கி காரில் வைக்க, “தேங்க்ஸ்” என்று விட்டு தன் நீள் பாவாடையை மெல்ல தூக்கியபடி பூக்களை மிதிக்காமல் ஆங்காங்கே கால்களை வைத்து கவனமாக நடந்தாள்.
“மேகி இதெல்லாம் ரொம்ப ஓவர்டி” என்று அலுத்துக் கொண்டாலும் நித்யாவும் அவளுடன் நடந்தாள். திலீப் தன் பாஸை தான் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். பைனாகுலர் வழியாக அவன் மேக்னாவை தான் பார்க்கிறான் என்று தெரிந்தது. “பாஸூக்கு இப்போ தான் ஹார்மோன்ஸ் வேலை செய்யுது போல, புதுசா பொண்ணை எல்லாம் ரசிக்கிறாரோ” என்று தோன்றியது அவனுக்கு