வெங்களி என்பது பீங்கான். சீனாவில் பீங்கான் பொருட்களின் பொற்காலமாக திகழ்ந்த 13ம் நூற்றாண்டு. சோழர்கள் ஆட்சி அந்திம காலம். குடும்பத் தொழிலான விவசாயத்தில் சிக்காது, கடல் பயணத்திலும், வெங்களி வாணிபத்திலும் மனதை தொலைத்த இளமாறன், பெரும் கனவுகளுடன் வெங்களிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சீனாவிற்கு செல்கிறான். உடன் உற்ற தோழன் வல்லபன்.
இவனைப் போன்றே பெரும் கனவுகளுடன் சென்று சீன மங்கையை கைப்பிடித்த ஒற்றை மகளான ரூ யூன்னின் தந்தை வளவன் வெங்களித் தொழிலில் சிறந்து விளங்குகிறான். இவர்கள் செல்லும் நேரம், வளவன் மர்ம நபர்களால் தாக்கப்பட காப்பாற்றப்போன நண்பர்கள் மேல் பழி விழுகிறது.
தெரியாத ஊர், புரியாத மொழி, சுற்றும் சூழ்ச்சி இதற்கிடையில் காதல் - மீண்டார்கள