காதலுக்கு புறக்காரணிகள் இடைஞ்சலாக வந்தால் காதலர்கள் போராடி வெல்வார்கள். காலம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை காதலர்களுக்குள் நிகழ்த்தினால் காதல் தான் என்ன செய்திட முடியும்? காலத்தையும் தாண்டி நிற்கும் காதல்... என்பதைக் காலத்திற்கும் காட்டினால் தானே காதல் தேவனுக்கு மரியாதை?! தேவனும் தேவியும் சேர்ந்து தங்கள் காதலில் விளையாடிய காலத்திற்கு பதில் சொன்னார்களா? காலத்தையும் தாண்டி நின்று நிலைத்து கை சேர்ந்ததா என்பதை சொல்லும் காதலின் புது அத்தியாயமே இந்த உன்னை சேரும் நாள்... வாருங்கள் போகலாம் தேவன் - தேவியோடு ஒரு பயணம்...