Jump to ratings and reviews

ஆட்டனத்தி (Aattanaththi) (Short Stories)

1970களின் தொடக்கத்திலிருந்து எழுதி வரும் வண்ணநிலவனின் புதிய சிறுகதைத் தொகுப்பு இந்த நூல்.
சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை இலக்கியமாக மாற்றும் கலையில் தேர்ந்தவர் வண்ணநிலவன். தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகும் சகமனிதனைப் போற்றுவதற்கான அன்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் மனிதர்களே வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் ஒலித்த மென்மையான குரலும் உணர்ச்சிவசப்படாத யதார்த்தப் பார்வையும் இத்தொகுப்பிலும் காணப்படுகின்றன.
இதில் இடம்பெறும் 11 கதைகளும் வேறுவேறு காலங்களிலும் இடங்களிலும் நிகழ்கின்றன. மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான மனநிலையை உருவாக்கும் சூழலும் புறவுலகை ஒரு சாட்சியாக நின்ī

88 pages, Kindle Edition

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (16%)
4 stars
4 (66%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Subalakshmi Mohanrarj.
127 reviews5 followers
September 29, 2026
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம். வண்ணநிலவன் அவர்களின்  "மழைப் பயணம்" மற்றும் "கடல்புரத்தில்" புத்தகங்களைத் தொடர்ந்து நான் வாசிக்கும் புத்தகம் இது.

மனிதர்களின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு பிரச்சினைகளை அவர்களின் சூழலின் வாயிலாகவும், அவர்களின் வட்டார மொழியின் நடையிலும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

அலைச்சல் - கணவனை இழந்தபிறகு மகனோட வீட்லயும் மகளோட வீட்லயும் மாறி மாறி தங்குற கற்பகத்தம்மாள் பற்றிய கதை இது. ஒரு வீட்ல இருக்கும்போது இன்னொரு வீட்டுக்குபோனா நல்லா இருக்குமேனு தோன்றதும் அந்த நினைப்புல நாள் பூரா அலைக்கழியுற உணர்வையும் சொல்லி இருக்காரு.

சுயமரியாதை - சுயமரியாதை அப்புறம் சுத்தி இருக்கிறவங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்க கூடாதுனு நினைச்சு, தன்னுடைய மனைவியையும் இழக்க தயாரா இருக்க தெட்சிணாமூர்த்தி மாதிரி மனுஷங்க இன்னும் இந்த உலகத்துல இருக்காங்கன்னு நினைக்கும்போது மனசுக்கு சங்கடமா இருந்துச்சு.

நினைப்பு - சரோஜா நினைப்பில் இருந்த பயம் நிஜத்தில் நடக்காமல் போனது என்னை மிகவும் ஆசவாசப்படுத்தியது.

ஆட்டனத்தி, கொள்ளை மற்றும் மேனகை ஆகிய மூன்று சிறுகதைகளும் வரலாற்று மற்றும் இதிகாசப் புனைவை மையமாகவைத்து எழுதப்பட்ட மறுபுனைவு.

கதை மாந்தர்களுக்கு ஏற்படும் ஒரு வித சங்கடத்தை நாமும் நம் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்திருப்போம், அந்த சங்கடத்தை திரும்பிப் பார்க்கும்படி அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு. சிறிய தொகுப்பு. அழகான அட்டைப்படம்.
Profile Image for Prabha Nagarajan.
8 reviews2 followers
June 10, 2026
ஆட்டனத்தி- வண்ணநிலவன்
இந்த சிறுகதைத் தொகுப்பு, மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளைப் பேசும் ஒரு சிறந்த படைப்பு.

இதில் இடம்பெற்றுள்ள "அலைச்சல்", "நினைப்பு" ஆகிய கதைகள் சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்வின் தேடல்களையும், ஏமாற்றங்களையும் எதார்த்தமாக விவரிக்கின்றன.

"சுயமரியாதை" மற்றும் "வானவேடிக்கை" ஆகிய கதைகள் மனித உறவுகளுக்குள் இருக்கும் தார்மீகப் போராட்டங்களையும், சமூக மதிப்பீடுகளையும் ஆழமாகப் பேசுகின்றன.

தொகுப்பின் முதன்மைக் கதையான "ஆட்டனத்தி" சங்க காலத் தொன்மத்தின் நிழலாட்டத்தோடு தற்காலத் தவிப்பை இணைக்கிறது.

அதேபோல், "மேனகை" மற்றும் "கொள்ளை" போன்ற வரலாற்று, புராணப் பாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகள், வழக்கமான பிம்பங்களைத் தாண்டி சாமானியர்களின் பார்வையில் புதிய பார்வையையும், மாற்றுப் புரிதல்களையும் தருகின்றன.

திருநெல்வேலி மக்களின் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்த 11 கதைகளும், சாதாரண மனிதர்களின் மனப் போராட்டங்களை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. வாழ்வின் எதார்த்தத்தையும், மனிதர்களின் பாசத்தையும் மிக ஆழமாகப் புரிய வைக்கும் இந்த புத்தகம், வாசிக்கும் ஒவ்வொருவர் மனதையும் நிச்சயம் தொடும்.
Profile Image for Gayathri (books_and_lits).
120 reviews5 followers
February 21, 2026
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் தான் 1970 இல் இருந்து 2019 வரை இவர் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பை வாசித்து முடித்திருந்தேன்.108 சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட அத்தொகுப்பு ஒரு புதிய வாசிப்பனுபவமாக அமைந்தது.1970 இல் வெளிவந்திருந்த “யுகதர்மம்” தொடங்கி 2019 இல் எழுதியிருந்த “ஒரு உரையாடல்” வரை வாசித்ததில் அவருடைய எழுத்து எப்படி ஒவ்வொரு கட்டமாக மாறியுள்ளது,வளர்ச்சி அடைந்துள்ளது,மெருகேறியுள்ளது என்பதை நன்றாக உணர முடிந்தது.வண்ணநிலவன் என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்திய வாசிப்பு அது.

அதைத் தொடர்ந்து இந்த நூலான “ஆட்டனத்தி”யும் இவருடைய சிறுகதைகளின் தொகுப்பே.சமீபத்திய வெளியீடான இந்நூலில் 2020 முதல் 2025 ஆம் ஆண்டுகளில் எழுதிய 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.முன்பு வாசித்த சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ளது போலவே இங்கும் ஆர்ப்பாட்டமில்லாத அன்றாட வாழ்வில் சந்திக்கும் மக்கள்,அவர்கள் எதிர்கொள்ளும் அவர்களுக்கே உரிய பிரச்சினைகள்,அவர்கள் மனவோட்டங்கள் என எட்டு கதைகள்.மீதமுள்ள மூன்று கதைகள் வரலாற்றுப் புனைவு.

Read more…

https://www.instagram.com/p/DWleC8HE_...

Displaying 1 - 3 of 3 reviews