புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள்.
அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து.
அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாகிறான். அவன் நூலகத்தின் அடியிலுள்ள ரகசிய நூலகம் ஒன்றினைப் பற்றிக் கூறி அதனுள் அழைத்துப் போகிறான்
அந்த ரகசிய நூலகம் விசித்திரமானது.
உலகில் எங்கே புத்தகம் தூக்கி எறியப்பட்டாலும் அது இங்கே வந்து சேகரமாகிவிடும். அது போலவே பழைய புத்தகங்களைப் பாதுகாக்கும் அவசர சிகிட்சைப் பிரிவும் அங்குண்டு.
அந்த நூலகத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு மாயஉலகம் போன்றிருக்கிறது. ஆடு, முயல், ஆமை. என அங்கே புத்தகம் படிக்கும் விலங்குகள் ஏன் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்கு விசித்திரமான காரணங்களைக் கூறுகிறார்கள்.
மாய நூலகத்தினை நடத்திவரும் சாக்ரடீஸைச் சந்தித்துப் பேசுகிறான் நந்து. முடிவில் அவனுக்கு ஒரு அரிய பரிசு கிடைக்கிறது
அது என்ன பரிசு, அதைக் கொண்டு என்ன செய்தான் என நீள்கிறது சிறார்களுக்கான இந்த நாவல்
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
புத்தகம் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 55 நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ்
🔆நந்து என்னும் சிறுவன் தன்னுடைய விடுமுறை நாட்களில் , அலைபேசியை பயன்படுத்தியே தன்னுடைய பொழுதைக் கழிக்கிறான் . இதனைக் கண்ட அவனது தாய் , அவனை புத்தகம் படிக்குமாறு சொல்கிறாள். நந்துவோ ஆங்கில புத்தகங்கள் தான் படிக்க தெரியும் என்றும் தமிழ் புத்தகங்கள் படிக்க தெரியாது என்று கூறுகிறான் . அம்மா அவனை அழைத்துக் கொண்டு நூலகத்திற்குச் செல்கிறாள் .
🔆அங்கே பெனி என்னும் நண்பன் , நந்துவுக்கு அறிமுகமாகிறான். இருவருமாக புத்தகம் படிக்கிறார்கள் . பெனி நந்துவிடம் சிவப்பு நூலகத்தை பற்றி கூறுகிறான் . இருவரும் அங்கு சென்றவுடன் ஒரு மாய உலகம் என்று அறிந்துக் கொள்கிறார்கள் . அங்கே அவர்கள் கண்ட காட்சிகள் , மிதக்கும் புத்தக அறை , விலங்குகளின் வாசிக்கும் திறன் , அனைத்தும் அவர்களை ஆச்சரியம் கொள்ள வைத்தது .
🔆500 பக்கங்களைக் கொண்ட நாவல் நமக்கு தர முடியாத உணர்வுகளை 50 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம் நமக்கு தர முடியும்
🔆என்னிடம் சிலர் கேட்டதுண்டு , நாங்கள் வாசிக்க ஏதாவது புத்தகங்களை கூற வேண்டுமென்று . அதை என்னால் கூற முடியாது . எனது பக்கத்தில் நான் படித்த புத்தகங்களிலிருந்து எனக்கு பிடித்த / பாதித்த செய்திகளை பகிர்கிறேன் . அது உங்களுக்கு பிடித்திருந்தால் , அந்த புத்தகத்தை தேர்வு செய்யலாம் . ஏனென்றால் , இரு வாசகர்கள் ஒரே புத்தகத்தை படித்தாலும் , உணர்வுகள் வேறுபடும் . அதனால் வாசகர்களை கட்டாயப்படுத்தக் கூடாது .
நான் படித்த புத்தகங்களிலே, மிகவும் அருமையான புத்தகம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
📚இது ஒரு சிறார் நாவல். கண்டிப்பாக குழந்தைகள் இந்நாவலை விரும்புவர். அதில் எனக்கு ஏதும் சந்தேகமில்லை.
📚நந்து என்ற சிறுவன் தனது கோடை விடுமுறையை நண்பர்களுடன் விளையாடி கழிக்கலாம் என்று நினைத்தான். ஆனால், நண்பர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீடியோ கேம் விளையாடலாம் என்று அம்மாவிடம் கேட்க "வீடியோ கேம் கிடையாது நாம நூலகத்திற்கு போவோம்" என்று அழைத்துச் செல்கிறாள். இதுவே கதையின் ஆரம்பம்.
📚அதன் பின் இருப்பதில் பாதி குழந்தைகளுக்கு ஏற்ப மாயாஜால நூலகம், மீதி அறநெறி மற்றும் வாசிப்பின் வழிகளும் முக்கியத்துவமும்.
📚இக்கதையை அதிக பக்கங்கள் எழுதி இருந்தால் இன்னும் சந்தோஷமாக படித்துக் கொண்டே இருந்திருப்பேன். மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.
📚குழந்தைகளுக்கு படிக்க வழி காட்டுவதே இந்த புத்தகத்தின் கரு என்று புரிந்து கொள்ளும் பொழுது மிக்கமகிழ்ச்சி. அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இக்கதையை படித்துக் காட்டுங்கள்.
I just became kid when I read this book, the fantasy involved in this book keep your imagination wider and opens a gate and conveys the importance of book reading be it new or experience reader this book have interesting stories. Nice book for children’s after reading this book definitely many nandhu and penny will evolve
Reading books was not in my interests. This book was suggested by a good friend. Entire story and way it was written makes easier for all age groups. Ofcourse, I see myself in the character called nandhu a kid in magic library. Reading a book is not only to improve knowledge but also to live ethically. Writer has conveyed the importance of reading and usage of time by a creating a wonder world called sivapu noolagam. Every one is a reader its our duty to keep it alive always.