உண்மையின் பக்கம் நிற்க முடியாத சூழல்.
பொய்யின் பக்கம் நின்றே ஆக வேண்டிய சூழல்.
நின்று விடுகிறீர்கள்.
அங்கிருந்துதான் ஆட்டம் ஆரம்பமாகும்.
ஆயிரம் சமாதானங்களை
அள்ளி அள்ளி கொட்டி நிரப்பினாலும்,
அத்தனையையும் விழுங்கும் புதைகுழியாய்,
இந்த மனசு
திரும்ப திரும்ப,
செய்தது தவறுதான்
என மன்றாடிக் கொண்டேயிருக்கும் ஒரு சிலருக்கு.
"தன்னெஞ்சறிவது பொய்யற்க,
பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்"