ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் செல்லப்பாவின் ஜீவனாம்சம் தமிழின் முக்கியமான நாவல். 1960-ல் வெளியான இந்நாவல் இன்று வாசிக்கும்போதும் ஜீவனுடன் இருப்பது வியக்கவைக்கிறது. மனித மனதின் போராட்டங்களை அவ்வளவு நுட்பமாகவும், தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் லாவகத்தோடும் நாவலில் கையாண்டிருக்கிறார் செல்லப்பா. மிகக் குறைந்த பாத்திரங்களைக் கொண்டு ஒரு அற்புதமான மனோ உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறார். உறவுகளத் தீர்மானிப்பது அன்பா அல்லது பொருளா என்ற சர்ச்சையை நம்முன் வைக்கிறார். வாழ்வில் புறவயமாக ஏற்படும் ஒரு சிக்கல் அகவயமாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை மிகச்சிறப்பாக சித்தரித் திருக்கிறார். அடுத்தவர் சொல்லும் வார்த்தை அல்லது வாக்கியத்திலிருந்து அவர்களை அவதானிக்கும் கலையை நோ்த்தியோடும் ஆழ்ந்த புரிதல்களோடும் வெளிப்படுத் தியுள்ளார். மனித மனத்தின் ஆழத்தில் நுழைந்து செல்லும் ஆற்றல் அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. படிக்கும்போது மூளையில் ஏற்படும் லகரி, மனப்பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று. செல்லப்பாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று ஜீவனாம்சத்தைச் சொல்லலாம்.
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001
'வாடிவாசல்' நாவலின் வேகமான, Consise ஆன கதைசொல்லல் 'ஜீவனாம்சம்'ல் இல்லை. அவற்றை நான் எதிர்பார்த்தும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை. இருந்தாலும் சி.சு.செல்லப்பா-வின் இரண்டாம் நாவலான இது, அவரின் முதல் நாவலைவிட, பல விதங்களில் முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றியது.
பதின்வயதில் விதவையாகிப் போய், தன் பிறந்தவீட்டை வந்தடைந்துவிட்ட ஒரு பெண் (சாவித்திரி). அந்த வீட்டின் சமையற்கட்டு, பின்னாலிருக்கும் கிணற்றடி, வீட்டிற்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் கொஞ்சமாகத் தெரியும் ரேழி வாசல் - இவையே தன் சிறு உலகமாக மாறிப்போக, தனக்கென்று அவளிடம் இருப்பவை அவளின் புக்கக நினைவுகள் மட்டுமே. இந்தச் சின்ன சட்டகத்துக்குள் கதை சொல்லப் பார்த்திருக்கிறார் சி.சு.செல்லப்பா.
அவர் வார்த்தைகளிலேயே:
“ ‘வாடிவாசல்’ எழுதும்போது என் உத்தேசங்களில் ஒன்று செயல் இயக்கத்தை எவ்வளவு வேகமாகச் சித்தரித்துக்காட்ட முடியும் என்று பார்ப்பதுதான். அங்கே அது அவசியம். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வேகஇயக்கம், கதையின் போக்கிலே மட்டுமில்லாமல், சூழ்நிலை, பேச்சு இவற்றினூடும் தெரிய வேண்டும் என்பது. ‘ஜீவனாம்சம்’மில் அதுக்கு மாறாக. செயல் இயக்கம் - எவ்வளவு வேகமாக இருந்தாலும் சரி, அதை சித்தரிக்கும் போது, அணுவைப் பிளக்கிற மாதிரி அசைவையும் பிளந்து, சினிமாவில் ‘ஸ்லோ மோஷனில்’ காட்டுவது போல் அந்த அசைவைகண்களால் நிதானமாக தொடரும்படியாக, பிடித்து நிறுத்தித் தேக்கிக் காட்டுகிற மாதிரி செய்ய வேண்டும் என்றுஎனக்குப் பட்டது. இங்கு அது அவசியம். எனவே சாவித்திரியை அசைபோட வைத்தேன். சாவித்திரி என்ன, கதைநெடுக அசைபோடும் ஒரு மந்தகதி தான் ஓடுவதாகவே நான் நினைக்கிறேன். ‘வாடிவாசல்’லுக்கு நிறைவு துரிதகதியில்சித்தரிப்பு மூலம். ‘ஜீவனாம்சம்’முக்கு நிறைவு மந்தகதியில் சித்தரிப்பு மூலம். ”
நாவலில் சில அருமையான தருணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நாவல் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. 134 பக்கங்கள் தான் என்றாலும் நீண்ட புத்தகம் ஒன்றை வாசிப்பதுபோன்ற அயர்ச்சி அவ்வப்போது வந்துபோனது.
சிறுவயதில் விதவையான நாயகி தன அண்ணன் வீட்டில் மிச்ச காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது வெளி உலக பிரச்சனை அலைக்கழிக்கா விட்டாலும் உறவுக்குள் உள்ள பிரச்ச்சனை தான் கதை... வாழ்க்கை கஷ்டம்தான்....
கதையின் போக்கிலும் சூழலிலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால் கடைசி அத்தியாயம் சற்றே The great Indian kitchen படத்தின் முடிவினை போல் இருந்ததால் என்னை மிகவும் கவர்ந்தது.