"உயிரியலின் உச்சி முடியையும் சூழலியலையும் சிறுவர்கள் குதூகலமாக வாசித்து மகிழ்வதன் ஊடாக கற்றுக் கொள்வதற்கான நூல். சிறாருக்கு வாசிக்க வாங்கித் தரும் சாக்கில் பெரியவர்களே வாசித்து அறிவதற்கு ஆழமான உட்பொருள் கொண்ட நூல்."
- http://thamizhbooks.com/-44.html
"டாக்டர் டூலிட்டில் தெரியுமா? ஹியூக் ஜான் லாஃப்டிங் எனும் பிரிட்டிஷ் எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரமான டூலிட்டில் விலங்குகளுடன் பேசும் திறன் கொண்டவர். கிட்டத்தட்ட இதேபோன்ற திறன் கொண்ட சிறுவன், விலங்குகள் நடத்தும் பள்ளியில் எடுப்பு வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்த பின்னர், அதில் சேர முடிவெடுக்கிறான். விளம்பரத்தைச் சாதாரண மனிதர்களால் பார்க்க முடியாது என்பதுதான் இதில் முக்கியம். சிறுவனுக்கு, ரிச்சர்ட் பார்க்கர் எனும் நாய் (‘லைஃப் ஆஃப் பை’ நாவல்/திரைப்படத்தில் வரும் புலிக்கும் இதே பெயர்தான்!), மாரி எனும் ஆந்தை, லீலா எனும் பூனை, கிளி, பொன் வண்டு, வாத்து, முயல் என்று பல பிராணி நண்பர்கள் உண்டு. அந்தப் பள்ளியில் சேர அந்தச் சிறுவன் மேற்கொள்ளும் பயணம்தான் ‘டார்வின் ஸ்கூல்’. இந்தக் கதையினூடாகவே, பரிணாமவியல், டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஆகிய விஷயங்கள் சிறுவர்களுக்குப் புரியுமாறு எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) வென்ற ஆயிஷா இரா. நடராசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், சிறுவர் இலக்கியத்துக்குப் புதுவரவு!"
I purchased the book since it is from Era.Natarasan and Darwin name is present in title. I enjoyed reading it and it is an easy read.Learnt Darwin's Theory and about animals, butterflies, Frogs,Fireflies,.... If this book is filmed I will definitely watch it .I feel it should come as a film so that it becomes as easy reference for any one to know at least some information about Darwin. Author has ended with another forest target and it seems he has planned for series. I am looking for multiple book series on Darwin .Eagerly waiting to grab one when Author releases.