விழி மூடி சோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவனின் செவிகளில் மெலிதாக கொலுசொலி. நொடிகள் கடக்கக் கடக்க அந்த கொலுசொலியின் சத்தம் கூடிக்கொண்டே சென்றது. அந்த ஒலியினை வைத்து தன்னை நோக்கி யாரோ வருவதை ஊகித்தவனுக்கு, அவனது உடல் விரைத்தது, ‘யார் தந்த தைரியம் இது?’ என்று.
“சாரே…” என்றோர் மெல்லிய குரல்.
எரிச்சலாக வந்தது ஆதீஸ்வரனுக்கு. விழிகளை வேண்டுமென்றே திறக்கவில்லை.
“என்னே திட்டிதறுக்கறது சார். குறைச்சு சம்சாரிக்கணும் பிளீஸ்” என்று ‘என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களிடம் பேச வேண்டும்’ என கெஞ்சலாகக் கேட்ட தாராவின் குரலில் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
பட்டென்று விழிகளைத் திறந்தான். விழிகளில் செவ்வரி ஓடிட, முகம் இறுக