இந்த புத்தகம் வாசிக்கும் பொழுது எனக்குள் நான் மறக்க நினைக்கும் வெறுமையையும் நிலையற்றதையும் அதிகமாக நினைக்கவைத்தது ...சில பக்கங்கள் உண்மையிலயே மிகவும் சோர்வையும் தடுமாற்றத்தையுமே கொடுத்தது ஆனால் இந்த நாவல் பேசும் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் கதை மாந்தர்களுக்கு எழுத்தாளர் உபயோகிக்கும் பெயர்கள் அந்த பெயர்களினால் நாம் புரிந்து கொள்ளும் முதலாளித்துவ மற்றும் சாதிய படிநிலை பிரச்சனைகள் மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது..கதையில் வரும் வெள்ளை என்னும் கதாபாத்திரம் (வயது 40) கல்யாணம்,குடும்பம்,நண்பர்கள் என்று எதுவுமே இல்லாமல் தான் எதிர் கொள்ளும் உளவியல் பிரச்சனைகள் மற்றும் ஒருவித தாழ்வுமனப்பான்மையையும் இதனால் இவருக்கு ஏற்படும் "மல்ட்டி பர்ஸ்னால்ட்டி டிசார்டர்" நோய்.. என்று கதை மிக சிறப்பாக பின்னப்பட்டிருக்கிறது .. இதில் குறிப்பாக சொல்லப்படும் ஜெனரேஷன் மாற்றம் எனக்கு ஏதோ நாவலில் இன்னமுமே கூட சில எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது...
கதை முழுக்க பயணிக்கும் ஆரஞ்சு கதாபாத்திரம்(வெள்ளை தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் பெண் ) எந்த வித தாக்கத்தையுமே எனக்குள் ஏற்படுத்தவில்லை உண்மையில் ஆரஞ்சு கதாபாத்திரம்தான் நாவலில் முக்கியமான பேசும் பொருளாக ஆரம்பத்தில் காட்டப்பட்டிருக்கும் ஆனால் எனக்கு இந்த நாவலில் அணைத்தையுமே கொஞ்சம் விலகி இருந்து பார்க்கும் பிணங்களை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது பிணங்களுக்குள்ளான உரையாடல்கள் மற்றும் அவைகள் முன் வைக்கும் தர்க்கங்கள் என்று அந்த பகுதிகளை மிகவும் ரசித்தேன்...நீலம் பச்சை கருப்பு என்று வரும் கதாபாத்திரங்கள் போலீஸ் அதிகாரிகளாக வருகிறது.. அதில் நீலத்திற்கும் பச்சைக்கும் இடையில் இருக்கும் பனிப்போர் எனக்கு எழுத்தாளர் இமையத்தின் போலீஸ் என்னும் சிறுக்கதையை நினைவுப்படுத்தியது.... இந்த நாவலில் வடிவமைப்புதான் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தியது முதல் 20 பக்கம் வரை கதை புடிபடாமலே செல்வதைத் போன்றதொரு தயக்கத்தை ஏற்ப்படுத்தியது (சில சமயம் தலைச்சுற்றல் கூட ஏற்பட்டது) உண்மையில் நாவலில் வரும் வெள்ளை என்னும் கதாபாத்திரத்திற்கு காமம் மட்டுமே முழுமையான பிரச்சினை இல்லை அவனது பிரச்சினை வெறுமை
நாம் அன்றாட வாழ்வில் நாவலில் வரும் வெள்ளையைப் போன்றதொரு நபரை நிச்சயம் எதிர்க்கொள்வோம் அவர்கள் 40 வயதுடையவர்கள் தான் என்றில்லை 25 வயது ஏன் 20 வயது உள்ளவர்களும் கூட இருக்கிறார்கள் இவர்கள் எல்லாரிடமும் பொதுவாக இருப்பது வெறுமை மற்றும் என்னிடம் பேசக்கூட யாருமில்லையே என்றிருப்பவர்கள் தான்.. இந்த நாவல் இதைதான் பேசுகிறது நாம் அன்றாட வாழ்வில் நாம் பார்த்தும் பார்க்காமல் கண்டுக்கொள்ளாமல் தவரவிட்ட ஏதோ ஒரு வகையில் சமுகத்தாலும் நம்மாலும் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களை பேசுகிறது...
நாம் நம் பார்வையில் சாம்பலாகவோ அடர்சாம்பலாகவோ இருக்கலாம் ஆனால் அனைவருமே ஏதோவொரு வகையில் வெள்ளையாக தான் இருக்கிறோம் ....
நன்றி எழுத்தாளர் Harisankar
குறிப்பு : இவரின் பாரிஸ் நாவல் திரைப்படமாக வெள்ளித்திரையில் கூடிய விரைவில் வரப்போகிறது.... 😀😀❤️❤️
மேலே எழுதியிருப்பதில் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏