A. Madhavan (ஆ. மாதவன்) was a Tamil writer born and raised in Thiruvananthapuram, Kerala. He was one of the pioneers of realist writing in modern Tamil literature. He has written short stories, novels, essays, and translations and has edited magazines. Furthermore, he was acclaimed by readers and critics alike as the storyteller of the market street, for bringing everyday events of the bazaar he lived in to his literary work.
He was the recipient of the 2016 Sahitya Academy Award for his collection of articles titled Illakkiya Chuvadukal (Literary Traces).
Selected works Punalum Manalum (On a River’s Bank) Krishna Parunthu (Brahmini Kite) Thoovaanam (Drizzle) Kaalai (Bull) Ettavathu Naal (Eighth Day)
Translations from Malayalam: Malayatoor Ramakrishnan’s Yakshi (A Mythical Being) P.K. Balakrishnan’s Ini Gnan Urangatte (And Now, Let Me sleep) Karoor Nilakantapillai’s Sammaanam (Reward)
கிருஷ்ணப் பருந்து வட்டார வழக்கு மொழியில் எதார்த்தவாத கதை சொல்லும் முறையில் எழுதப்பட்ட நாவல். மனிதனின் வெளித்தோற்றம் வைத்து அவனை நிச்சயமாக எடை போட முடியாது என்ற தீவிரமான கோணத்தில் நாவல் ஆராய்கிறது. கிருஷ்ணப் பருந்து தமிழில் வெளிவந்த முக்கியமான நாவல் பட்டியலில் எப்போதும் இடம்பெறும் ஒன்று. பத்து முக்கிய தமிழ் நாவலில் ஒன்றாக ஜெயமோகன் இதை மதிப்பிடுகிறார்.
சிறுவயதில் மிக வசதியாக வாழும் குருஸ்சுவாமி தனது தந்தையின் பாலியல் மீறல்களை பார்த்து வளர்கிறார், ஆனால் மீறல் என்று அறிந்தும் உடல் வேட்கை அவர் உள் ஒருவித வேட்கையை எப்போதும் கனன்று கொண்டு இருக்கிறது. மனைவி குழந்தைகள் இழந்து தனிமையில் வீட்டு வாடகை தென்னை மரம் தொப்பு வருமானம் என்று வாழ்கிறார் குருஸ்சுவாமி. கோவில் சிற்பங்களை முறைத்து கொண்டு இருப்பதும் நாள் முழுவதும் புத்தகம் வாசிப்பதுமாக தான் அவர் பொழுது போகிறது. கண்ட கண்ட புத்தகம் படித்து பேச்சும் ஒரு மாதிரி தத்துவம் போல ஆகிவிடுகிறது. போதாதற்கு தாடி வேறு வளர்ந்து விடுகிறது. ஊர் மக்கள் சாமியப்பா சாமியப்பா என்று அழைக்க தொடங்குகிறனர். எப்போதும் ஒருவிதமான மௌனம் அவனிடம் இருக்கிறது. வேலப்பனை சிறுவயது முதலே வளர்த்து வாழ்க்கையில் ஒரு வழி காமித்துவிடும் குருஸ் சுவாமி அவன் காதலையும் கூட நின்று நிறைவேற்றி வைக்கிறார். ஒரு வகையில் தன் நிறைவேறா காதலை இதான் மூலம் தீர்த்துக் கொள்கிறார். ஆனால் அவர் வீட்டில் இருக்கும் நிர்வான பெண் ஓவியத்தை வேலப்பன் பார்த்த போது குருஸ்சுவாமி ஆழ் மனதின் பிம்பம் தெரிந்து விடுகிறது . ஆகவே தன் வாழ்கைக்கு எல்லாம் விதத்திலும் காரணமாக இருந்த குருஸ்சுவாமியை கடுமையாக தக்கி பேச தொடங்குகிறான். கூடவே கால மாற்றத்தில் குடி போக்கிரிதனம் என்று போய் ஒரு சிக்கல் மாட்டுகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் மணைவி ராணியை அடைய நினைக்கும் குருஸ்சுவாமி இறுதியில் எப்படி தண்டனை அடைந்தார் என்று நாவல் இறுதியில் வருகிறது . ராணி தனது கணவன் மீது இருக்கும் காதல் அன்பால் அவரை தண்டிக்கிறாள்.
ஆனால் குருஸ்வாமிக்கு உண்மையில் ராணி மீது ஈர்ப்பு இருந்தது என்றால் வேலப்பன் ராணியின் காதலை சேர்த்து வைத்த போதே அதை அவர் முயற்சி செய்து பார்த்து இருக்கலாம். வேலப்பன் ராணியும் ராணியின் சொந்தங்களுக்கு பயந்து கொண்டு ஊர்ஊராக அலைந்து ஒரு குழந்தை பிறந்த பிறகு குருஸ்சாமி வீட்டிற்கு வந்த பிறகு ராணி மீது ஆசை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஒரு விதத்தில் ராணியின் அழகு அவரை ஏதோ செய்கிறது. அடிப்பட்டு படுக்கை இருக்கும் போது ராணி கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து கொள்கிறார், ஆனால் ராணி விலகி போய்விடுகிறாள். திருப்ம வந்து பால் பொங்குவது போல் இருந்தது அதான் போய்விட்டேன், நல்ல வேலை பொங்கவில்லை என்று சொல்லும் போது. குருஸ் சுவாமி மனதை அவள் அறிந்து விட்டதை நாம் உணரலாம். ஆனால் எனக்கு குருஸ்சுவாமி நிலை சில கணம் நிலை தடுமாற்றம் என்று தான் படுகிறது. உடனே அவர் தனது பெரும் தவறை உணர்ந்து கொண்டு விட்டதாகதான் தோன்றுகின்றது.
தமிழில் வாசிக்க வேண்டிய நூல் என்று சொல்லலாம். ஆனால் தலைசிறந்த பத்தில் ஒன்றா என்றால் என் பதில் இல்லை.
நாவல் ஆசிரியர் = ஆ . மாதவன் 190 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம்
நான் மாதவன் அவர்களுடைய படைப்பை வாசிப்பது இதுவே முதல் முறை . நகுலனின் முன்னுரையின் துணைகொண்டு இந்த நாவலை வாசிக்க தொடங்கினேன் . இந்த நாவலை வாசிக்கும்பொழுது எனக்குள் பல கேள்விகள் தோன்றத் தொடங்கின . ஏன் ஒரு தனிமனிதனை சுற்றியே நாவல் சுழல்கிறது ? ஒரு தனிமனிதனின் உப்புசப்பில்லாத வாழ்கை எப்படி ஒரு சிறந்த இலக்கியமாக மாறும் ? ஒரு குறுகிய நிலப்பரப்பு வட்டத்துக்குள்ளே மட்டுமே ஏன் இந்த கதை நிகழ்கிறது ? இந்த கதை ஏன் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது ? இதற்கு "கிருஷ்ணப் பருந்து" என்ற கவித்துவமான தலைப்பு எதற்கு ? ஆனால் , இந்த புத்தகத்தின் இரண்டாம் பகுதியின் வழி நான் பயணிக்கும் தருணம் எனக்கு இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தமற்றவையாக தோன்ற தொடங்கின . புத்தகத்தின் இறுதி சில பக்கங்கள் இந்த கதையின் இலக்கியத் தரத்தை வேறு எங்கோ கொண்டுசென்றுவிட்டன . இதற்கு "கிருஷ்ணப் பருந்து" என்ற தலைப்பும் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் புரிந்துகொண்டேன் .
மலையாள நாட்டில் தோப்புவிளை என்ற சிறு பகுதியின் சொந்தக்காரரான குருஸ்வாமி என்ற வயோதிகரையும் , அவரை சுற்றி , அவரை அண்டி பிழைக்கும் ஒரு சில குடும்பங்களை சுற்றி நிகழும் கதைதான் இந்த கிருஷ்ணப் பருந்து. குருஸ்வாமி - பரம்பரை பண்ணையக்காரர் , பாட்டன் , அப்பனின் ஊதாரித்தனத்தால் செல்வம் சுருங்கி இன்று தோப்பு விளையில் ஒரு பகுதி மட்டுமே அவருக்கு சொந்தம் . தன் மனைவி சுப்புலெட்சுமியை பிள்ளைப்பேறில் இழந்தவர் - ஒண்டிக்கட்டை . அவருக்கு புத்தகமும் , நடையும் , தோப்புவிளை தேவி கோவிலும், அவரை சுற்றி வரும் ரவி ஆர்ட்டிஸ்ட் , முலாம் பூசும் பப்பன், பால் வியாபாரி வேலப்பன் -ராணி , தெருப்பாடகன் வெங்கு மற்றும் வேலைப்பெண் பார்வதி ஆகிய இவர்களும் தான் உலகம் . தன்னை சுற்றியுள்ள ஜீவன்களை தன் சொந்த பிள்ளைகளை போல் பார்த்துக்கொள்வார் . வேலப்பன் -ராணி காதல் விவகாரத்தில் ராணியின் பெரிய குடும்பத்திலிருந்து அவர்களின் உயிரை காப்பாற்றி அடைகாத்து வேலப்பனை ஒரு ஆளாக்கியது குருஸ்வாமி மட்டுமே . கதை காலப்போக்கில் முன்னும் பின்னும் நகர்ந்து நமக்கு கடந்த காலத்தையும் , நிகழ் காலத்தையும் காட்டிக்கொண்டே செல்ல ஒரு பெரும் திருப்பமாக வேலப்பனுக்கு குருஸ்வாமி மேல் ஒரு சந்தேகமாக உருவாகி கிளை பரப்பி ஒரு பெரும் வக்கிர விருட்சமாக உருக்கொள்கிறது . குருஸ்வாமியும் ராணியும் இடிந்து போனாலும் தங்களின் நிலையில் தவறாமல் வாழ்கை நகர , ஒரு போராட்டத்தின் நடுவே வேலப்பன் சிறையிலடைக்கப்பட ,அவனை மீட்க குருஸ்வாமியின் சிபாரிசு மட்டுமே ஒரே வழி என்றறிந்த ராணி ஸ்வாமியிடம் சென்று முறையிடும் தருணம் அவளுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது . அப்படி என்ன அதிர்ச்சி தந்தார் குருஸ்வாமி ? ராணி அதனை எவ்வாறு அணுகினாள் ? என்பதே கதையின் முடிவு .
இக்கதையின் கதை மாந்தர்களை பற்றி கதை வெளியானது முதல் பல தர்க்கங்களும் , விவாதங்களும் , விவரணைகளும் , மாறுபட்ட கருத்துக்களும் , கலவையான விமர்சனங்களும் எண்ணிலடங்கா முறை நிகழ்ந்திருக்கலாம் . ஆதலால் , இங்கு நான் அதனை பற்றி விவரிக்கப்போவதில்லை . என்னை பொறுத்தவரை இந்த கதையில் நடமாடும் கதை மாந்தர்களைத் தாண்டி இரண்டு முக்கிய பாத்திரங்கள் உள்ளன . ஒன்று இயற்கை , மற்றொன்று கதை முழுக்க அந்த உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து குருஸ்வாமியை பார்த்துக்கொண்டே இருக்கும் கிருஷ்ணப் பருந்து.
இயற்கை - இந்த கதையை சற்று ஆழமாக வாசித்தால் ��தை முழுக்க இயற்கையின் காலமும் , சூழலும் , வெளிப்பாடும் மாறிக்கொண்டே இருக்கின்றது . அதனை இந்த கதையின் போக்கிலும் , குருஸ்வாமியின் மனப்போக்கிலும் பொருத்தி பார்த்தோமேயானால் நமக்கு ஒன்று புலப்படும் . அங்கு நடக்கவிருக்கும் ஒரு உணர்வை , ஒரு நிகழ்வின் தாக்கத்தை அந்த பருவ நிலை மாற்றம் நமக்கு முன்னதாகவே ஒரு உருவகமாக நமக்கு உணர்த்திவிடுகிறது . உள்ளத்திற்கும் உடலுக்கும் நடுவே போர் நிகழும் தருணம் குருஸ்வாமியின் உள்ளம் அடையும் உஷ்னம் இந்த இயற்கையும் நமக்கு உணர்த்தும் .அந்த சில பக்கங்கள் உண்மையிலே உஷ்ணம் மிக்கவை . எப்பொழுதெல்லாம் அந்த போரில் உள்ளம் வெற்றிகொள்கிறதோ அப்பொழுது தென்றலோ , மழைச் சாரலோ இயற்கையின் வழி நமக்கு அந்த வெற்றியை உணர்த்திவிடுகிறது .
கிருஷ்ணப் பருந்து- கதை தொடங்கியவுடன் நமக்கு குருஸ்வாமியோடு அறிமுகப்படுத்தப்படுவது அந்த கிருஷ்ணப் பருந்துதான் . இந்த கதையில் குருஸ்வாமி என்ற பாத்திரமே ஒரு கிருஷ்ணப் பருந்துவை போலத்தான் . அதுபோலவே உயரமாக நின்று தனக்கு கீழ் உள்ள மனிதர்களை ஒரு கூர்மையான பார்வையால் வாழ்கை முழுக்க பார்வையிடுகிறார் . உலகம் கிருஷ்ணப் பருந்துவை பார்ப்பது போலவே இந்த மக்களும் அவரை ஒரு தெய்வரூபமாக தான் பார்க்கின்றனர் . கிருஷ்ணப் பருந்துவை பற்றி ஒன்றுமே அறியாமல் அதன்மேல் அளவு கடந்த ஒரு நம்பிக்கையை தூக்கி வைத்துவிடுகின்றனர் . இன்னொரு பக்கம் கிருஷ்ணப்பருந்து குருஸ்வாமியுடைய மனசாட்சியாக எனக்கு உருவகப்படுகிறது . ஒவ்வொரு முறையும் அவருடைய மனம் உடலோடு போராடும்பொழுது , தனிமை தீயினை மேலும் வலுவேற்ற வக்கிரத் தீயும் உடன் சேர்ந்து கொள்ளும் தருணம் அவருடைய மனசாட்சியின் மறுவுருவமாக வெளியே அந்த உயர்ந்த மரக்கிளையில் அந்த கிருஷ்ணப் பருந்து அமர்ந்து அவருக்காக காத்திருந்து அவரை கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது . கதையின் முடிவில் - இறுதி பக்கங்களில் குருஸ்வாமி எழுத்து வடிவில்வெறும் குருவாக மாறும் தருணம் கிருஷ்ணப் பருந்துவை நான் தேடிப்பார்த்தேன் எங்கும் காணவில்லை . தனிமையை தேடி செல்லும் சமூகமாக இப்பொழுது நம் சமூகம் மெல்ல மாறிவருகிறது . இது அழிவிற்கான அறிகுறி . மனிதன் தான் தோன்றிய காலம் முதல் துணையுடன் தான் இந்த பூமியில் தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளான் .அது இன்பமானதா ? துன்பமானதா ? என்பது வேறு , ஆனால் துணையே இல்லாமல் இருப்பது , அதனை விரும்புவது என்பது மனிதன் தான் மனிதன் என்ற நிலையில் இருந்து விலகிச்செல்வது என்றுதான் கூறவேண்டும் . தனிமையில் மனிதனுக்கு எந்த ஒரு விதிமுறைகளுமில்லை , அடிபணிதலுமில்லை அதனாலேயே என்னவோ அதனை சிலர் விரும்புகின்றனர் ,ஆனால் மனிதனின் மனதிடமிருந்தும் ,மனசாட்சியிடமிருந்தும் தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல . ஒரு நொடி , ஒரு நிகழ்வு , ஒரு தொடுதல் , ஒரு சொல் போதும் மனிதன் தன் தடம் மாற . " ராணியம்மா " என்றழைத்த ராணியை குருஸ்வாமி " நீதான் பிரசாதமாக வேண்டும்" என்று கேட்பதற்கு ஒரு நொடி தான் . குருஸ்வாமி குருவாக மாறுவதற்கும் ஒரு நொடிதான் . ஸ்வாமியப்பா - வெறும் வக்கிர சாமி என்று மாறுவதற்கும் ஒரு நொடிதான் . இங்கு யாரை குற்றம் சொல்வது ? மனிதனையா ? விதியையா ? தருணங்களையா ? சூழலையா ? உடலையா ? உள்ளத்தையா ? யாரை குற்றம் சொன்னாலும் , யாரும் அறிந்திடாத தவறானாலும், தானே அறிந்திடாத தவறானாலும் , தவறுக்கு பின் அந்த குற்றத்தை தூக்கிச்சுமக்கப்போவது அந்த மனிதனும் அவன் மனதும்தான் . நம் அனைவருக்குள்ளும் ஒரு பருந்து அமர்ந்துகொண்டு நம்மை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது , அது பறந்து போகாத வரை தான் நாம் மனதுள்ள மனிதர்கள் .
Excellent narration with emotions spread all throughout the novel...கலைக்கு வயதில்லை என்பதற்கான உதாரணம் இந்த புதினம்..இன்றும் புதிதாய் எழுதியது போல தோன்றுவது சிறப்பு...
A.Madhavan is a writer who based almost all his Tamil stories in the streets and markets of Thiruvananthapuram. This novel is a philosophical meditation on how lust lurks inside even the supposedly saintly man. The characters and conversations feel real and the tension in the last twenty pages is palpable. A great work of literature does not merely tell a story. It can make us look within and question the value systems abiding which we live our lives. By that yardstick, Krishna Parundhu is a work for the ages.
Amazing sketch on characters especially Samyappa, Parvathy, Rani, Velappan etc.. Nice story which deals about inner feelings and thoughts of human mind.. Mind blowing to read and cherish..