What do you think?

பிரபஞ்சன் மகாபாரதம் [Prapanchan Mahabharatham]
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. - பிரபஞ்சன்
344 pages, Paperback
First published December 1, 2014
About the author
பிரபஞ்சன்
64 books61 followersPrapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
December 12, 2019
மகாபாரதக் கிளைக்கதைகளும், நமக்கு தெரிந்த கதைகளின் பின்புலமும் கதைமாந்தர்கள் மற்றும் அவர்களின் செயல்கள் மீதான விமர்சனங்களும் அடங்கிய கட்டுரை தொகுப்பு. தர்மர் முதல் துரியாதனன் வரை முக்கிய மாந்தர்கள் அனைவரும் பாரதத்தில் எங்கெல்லாம் சறுக்கினார்கள், எங்கெல்லாம் தர்மத்தின்படி உயர்ந்து நின்றார்கள் என்று காட்டுகிறது.நமக்கு தெரிந்த பல கதைகளுக்கு காரணமாக இருக்கும் முன்கதைகள் பலவும் சுவாரசியம். ஒரே சம்பவங்கள் இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் வருவது, ஒரு சில சம்பவங்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பது போன்ற சில குறைகள் இருந்தாலும் மகாபாரத ரசிகர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
August 2, 2018
மகாபாரதத்தை பற்றிய முக்கியமான ஆழமான கட்டுரைகள். இவற்றை படித்தால் மகாபாரதத்தை பற்றி விஸ்தாராமாக இல்லையென்றாலும் நன்கு தெரிந்துக்கொள்ளலாம்.
Displaying 1 - 2 of 2 reviews