This is a story which take place in thiruparankundram,Madurai.This story tells the characters of purani and aravindan,who lived in present world with tamil culture(panbadu) in them. main characters includes *Purani *Aravindan *Muruganandam *Mangalashwary ammal *Vasantha *Bharama karar
Na. Parthasarathy (Tamil: நா. பார்த்தசாரதி), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under various pet names like Theeran, Aravindan, Manivannan, Ponmudi, Valavan, Kadalazhagan, Ilampooranan and Sengulam Veerasinga Kavirayar.
தனக்கென்று ஒரு உலகம், தனக்கென்று ஒரு diary , மதுரையின் வீதிகள் --> இவ்வளவு தான் அரவிந்தனின் உலகம். பூரணியை சந்திக்கும் வரை. புத்தகங்கள், அப்பா, திருபரங்குன்றம் --> இது தான் பூரணியின் உலகு. அரவிந்தனை சந்திக்கும்வரை. ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட இருவர் வெவ்வேறு சூழ்நிலையில் சந்தித்து ஒரே பயணத்தை மேற்கொள்கிறார்கள். நா.பார்த்தசாரதி இருவரையும் சேர்த்துவைத்து தொலைத்திருக்கலாம் -_-
பதிப்பகம், புத்தகங்கள், கலித்தொகையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை சார்ந்த கதையென சுவாரசியமாய் பயணிக்கிறது குறிஞ்சி மலர். நா.பார்த்தசாரதியின் இயல்பான எழுத்துநடை மற்றும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இது பொருந்தும் என்ற வரையறையை தாண்டிய கதையின் கரு - இவையிரண்டும் அலுப்பின்றி கதையை படிக்க தூண்டுகின்றன.
சில புத்தகங்கள் நமக்குள் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். வாசித்து முடித்து இரண்டு மூன்று நாட்களாவது நம்மை தூங்கவிடாமல் செய்துவிடும்.
அறுபதுகளிலும் அதன் பின்னரும் இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தன் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்றால் இந்நாவலின் வீரியத்தை தனியாக விளக்கத்தேவையில்லை.
"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."
அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். லட்சியவாதம் என்று அன்று உணரப்பட்டதை இந்தப் பாத்திரப் படைப்புகளின் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். கதையின் முக்கியத்துவும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த தாக்கத்தால்தான்.ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.
கதையின் முடிவில் மலர்ந்த குறிஞ்சி மலர் உதிர்ந்து விட்டது போல் ஒரு வருத்தம் .
Poorani and Aravindan, what anice charactersation! It is more than fifty years, since i first read it and I do not remember how many more times I read. I recommend this to book to all Tamil knowing persons, especially youngsters. It is ever fresh!
Ok read. The characters are far from reality. Couldn't connect with the main characters idea. Maybe the story was written in 1960s and got outdated in 2019.
One example. Poorani is the main character of the novel. Poorani's dad is a learnt tamil professor. After school, He doesn't send Poorani to college, because he believes college environment will spoil her daughter. And he is praised in this book for this. Tamil panpaadu.
கற்பனையில் படைக்கும் மாந்தர்களை இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத்திறன் மிக்க கலைஞர். தமிழ்ப்பெண்குலம் என்ற வளமான நிலம் வறண்டு போகின்ற வேளையில் மலிந்து வரும் குழப்பங்களையும் குறைகளையும் நீக்கி ஒளிபரப்புவதற்கு தாய்க்குலத்திற்கு மறுபடியும் ஓர் ஞானச்சுடர் தேவை.தொட்டதெல்லாம் விளங்கச் செய்யும் பொலிவு வாய்ந்த தமிழ்ப்பெண் மரபு ,அந்த மரபில் இருந்து இந்த நாட்டு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பண்பு வாய்ந்த லட்சிய பெண்கள் பிறக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் படைக்கப்பட்ட அருமையான படைப்பு . காலமாற்றத்தில் கடந்து போய்க் கொண்டிருக்கும் நமது வாழ்க்கை முறையில் பறிகொடுத்து வழிமறந்த ஒன்று பெண் மரபு .அது அணையும் சுடராய் தெரிகின்றது. பழைய நல்ல பழக்க வழக்கங்கள் மறந்து நவீனம் என்ற பெயரில் அதை ஏற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் இப்போதுள்ள பெண்களின் வாழ்க்கை முறை சிந்தனையில் தீப ஒளிச்சுடரை ஒளியேற்ற துடிக்கிறார் ஆசிரியர் பூரணியின் வாயிலாக. ஆசைகளின் ஆரம்பம்தான் அனைத்துற்க்குமான விளைவு என்பதனால் அதை அறிவு இச்சையை தன் மனதில் செலுத்தாமல் அதை மூளைய���ல் செலுத்தி சிந்தித்து செயலாற்ற வேண்டும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அரவிந்தன் திகழ்கிறார். இது இவரின் தனிச்சிறப்பு கதையின் நாயகன் என்றுமே ஒரு தனித்தன்மை வாய்ந்த விளங்கும் கதாபாத்திரமாகவே அமைந்திருப்பது வழக்கம் இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும் நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ள தேர்தல் களத்தில் நிகழும் நாட்கள் காட்டுமிராண்டித்தனமான கொடுஞ்செயல்களை இவர்தம் இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு
சென்ற வருட விடுமுறையில் தாயகத்திற்குச் சென்றிருந்த பொழுது வீட்டிலிருந்த குறிஞ்சி மலர் நாவலை கையோடு எடுத்து வந்தேன். அப்பா என்னிடம் இந்நாவலை வாசிக்கும்படி பலமுறைக் கேட்டிருந்தும், நான் அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்து வந்தேன்.
இப்படி எடுப்பாரற்று பல நாட்களாக என் அறையில் மறைந்திருந்த இந்நாவலை சென்ற வாரம் வெளியே எடுத்துப்பார்த்தேன்; முன் அட்டையில் தமிழழகு கொஞ்சும் ஒரு பெண்ணின் படமும், எரிதழல் கண்களும் கூரிய சிந்தனையும் உடைய ஒரு ஆணின் படத்தையும் பார்த்தபொழுது இக்கதை இவர்களிவருக்கும் இடையில் உருவாகும் காதல் பற்றிய கதையாக இருக்குமென்று நினைத்தது எவ்வளவு தவறு என்பதை பின்னர் அறிந்தேன்.
மறைந்த எழுத்தாளர், சாகித்திய அகாதமி விருது பெற்ற அமரர் நா. பார்த்தசாரதி அவர்களின் கற்பனையில் உருவான கருத்தாழமிக்க இந்நாவல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாகக் கேள்வியுற்றேன்.
இக்கதையில் வரும் சில முக்கியக் கதாபாத்திரங்கள்: பூரணி, அரவிந்தன், பேராசிரியர் அழகிய சிற்றம்பலம், முருகானந்தம், மங்களேஸ்வரி அம்மாள், வசந்தா, மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பர்மாக்காரர், திருநாவுக்கரசு, செல்லம் மற்றும் மங்கையர்க்கரசி.
கதையின் நாயகி பூரணி, தமிழ்ப் பேராசிரியரான தன் தந்தையின் மடியில் தமிழ்ப் பயின்று, உயரிய அறநெறிக் கொள்கையுடன், பாரதி ஏட்டில் ஏட்டிழெழுதிய நல்லொக்கத்துடன் வாழும் ஒரு புதுமைப்பெண்.
கதையின் நாயகன் அரவிந்தன், சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அவலங்கள், அநியாயங்கள் அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடும் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள இலட்சிய இளைஞன்.
அக்காலத்தில் இந்நாவலைப் படித்து அதன் ருசியில் இலயிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகக் கேள்வியுற்று வியப்படைந்தேன்.
இந்நாவலை வாசிக்கும்போது நான் ரசித்து வியந்த ஒரு முக்கிய விடயம், கதையின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் அமைந்திருக்கும் சங்கப்பாடல்களும், ஆசிரியரின் கவிதைகளுமாகும். இந்தத் தொடக்கப் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் அப்பகுதியின் கருவை ஏங்கி நிற்பதாகத் தோன்றியது.
உதாரணத்திற்கு தந்தையின் மறைவை எண்ணிச் சோர்ந்திருக்கும் பூரணியின் உள்ளத்தில் தோன்றும் ஒலியொன்று, அவள் தினம் சந்திக்கும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்பதை உரைக்கும் பாடல்;
"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே"
-நற்றிணை
"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லைஇனித்தெய்வேமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையா இங்ஙேன வந்து மூண்டதுவே!"
அரவிந்தன் தான் பூரணியை எதேட்சையாகக் கண்ட நினைவை தன் நோட்டு புத்தகத்தில் கவிதையாக வடித்திருந்தது;
"தரளம் மரைந்த ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெறியைக் கடைந்து – இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்"
``பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்’’
-- கம்பன்
தந்தையின் மறைவிற்குப் பின் தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் முதலாளியின் இறப்பை நினைத்து மனம் வாடி துன்புரும் அரவிந்தனின் மனக் கண்ணாடியை எடுத்துரைக்கும் பாடல்;
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை
நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையல் காட்டிரைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்.
-- திருமூலர்
இறுதியில் பூரணி தன் காதலனைப் பிரிந்து துயருரும் நிலையைக் கூறும் பாடல்`
"பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!"
இப்படி கதை முழுவதும் சங்கப்பாக்களும், பாரதியார் மற்றும் திருவள்ளுவரின் வரிகளும் வந்து வந்து வாசிப்பவர்களுக்கு தமிழ் விருந்தளித்துச் செல்கிறது.
கதையின் கரு நம்மில் பலருமறிந்த ஒன்றே. அதாவது கல்யாண வயதில் தன் தந்தையை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெண், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்/இன்னல்கள், அவள் இச்சமூகத்தால் பார்க்கப்படும் விதம், தான் வாழும் சமூகத்தின் மரபு திரியாமல், தந்தைக் கற்றுக் கொடுத்த தமிழாலும், அவரின் உயரிய அறநெறிக் கொள்கைகளைப் பார்த்து வளர்ந்ததால் தவறேதும் செய்யாமல், சமூகத்தை துணிச்சலாக எதிர்கொள்வதும், நிதிப்பற்றாக்குறைகளைச் சமாளித்து, தாய் தந்தையிழந்த தன் உடன்பிறப்புக்களை வழிநடத்திச் செல்லும் தாயின் உள்ளம் படைத்த, அப்பாவின் பெயருக்குக் களங்கமேற்படாமல் அவரின் பெருமையை ஏந்திச் செல்லும் ஒரு புரட்சிப் பெண்ணின் கதையாகும்.
அப்பெண் தான் ஏதேட்சையாக சந்திக்கும் ஒரு இளைஞனை முதலில் தவறாகப் புரிந்து கொள்வதும், அதுவே பின்னாளில் தவறெனப் புரிந்து அவனிடம் மன்னிப்புக் கேட்பதும், அதன்பின் அவர்களிவருக்குமிடையே நட்பென்ற மலர்ப் பூத்து, அது பின்னாளில் நட்பையும் கடந்துக் காதலாக மலர்கிறது. இப்படி அவர்களிவரும் தங்களைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை எதிர்த்துக் கொதித்தெழுந்து, அத்தவறுகளை களைக்க முற்படுவதும், அதனால் அவர்களடையும் துயரங்களை எதிர்த்து வெற்றி கொள்ளுவதும் கதையின் சுருக்கமாகும்.
ஆசிரியர் இக்கதை முழுவதும் பல நல்ல கருத்துக்களையும், சமூகத்தில் புரைகளாக நிற்கும் தவறான செல்வந்தர்களின் செயல்பாட்டையும், அவர்கள் நல்ல மனிதர்களை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதை இதில் உலாவரும் கதாபாத்திரங்களினூடே சரிவரப் புகுத்தி வெற்றி கண்டுள்ளார். ஆசிரியரின் தமிழ் வளமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.
ஆனாலும் இனிவரும் தலைமுறையினர் இந்நாவலை விரும்பிப் படிப்பார்களா என்பதில் சிறிது ஐயமெழுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கதையில் சில இடங்களில் சுவாரசியம் மெல்ல மெல்லக் குறைந்து, அடுத்து வரும் நிகழ்வுகள் வாசகர்களுக்கு எளிதில் யூகிக்கக் கூடியவையாக அமைந்துள்ளது. மேலும் கதை முழுவதும் சோக நெடி அதிகமுள்ளதாகத் தோன்றுவது முடிவில் சலிப்பூட்டுகிறது.
ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களனைத்தையும் நாவல் வந்த அந்தக்கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏன் இந்நாவல் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வெற்றி பெற்றதென்பது புரிகிறது. இந்த நாவலின் காட்சி வடிவமாகதூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். அன்றைய நாட்களில் இக்காட்சித்தொடரால் பலரும் ஈர்க்கப்பட்டிருந்தது இந்நாவலின் மிகப்பெறிய வெற்றியாகக் கருதுகிறேன்.
கதையில் வரும் பூரணி, அரவிந்தன் போன்று அறநெறியில் வாழும் மனிதர்கள் இன்று நம்முடன் இருக்கிறார்களா என்றால் வெற்றிடமே ���ிரம்பும். இத்தகு கொள்கைநெறியுடன் வாழ்பவர்களை இனி நேரில் காண்பதென்பதரிது
சில புத்தகங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். அப்படிப்பட்ட புதினம். கதை பூரணி, அரவிந்தன் இருவரை பற்றியது என்றாலும் கதை எழுதப்பட்ட காலம், இடம் தெளிவாக நம் முன் காட்சி படுத்தப்படுகிறது. முடிவு சோகமாக இருந்தாலும், பூரணியும் அரவிந்தனும் மனதில் நின்றுவிடுவார்கள்
பூரணி-அரவிந்தன் எந்த நிலையிலும் தன்னிலை மாறாதவர்களாய் வாழ்ந்து காட்டியிருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இவர்களை போன்ற மனிதர்கள் வாழ்வது அரிது. இவர்கள் நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.
என்னை மிகவும் கவர்ந்தது - இருவரும் இறுதி வரை காதலித்துக் கொண்டிருந்தார்கள் காதல் என்னும் வார்த்தையை சொல்லாதவர்களாய். இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாட்கணக்கில் தூக்கம் சரியாக இல்லை கதையின் முடிவை எண்ணி எண்ணி...
It's difficult to see a women like Poorani in present day living. 50 Years have been passed since this Novel's first publication. The way of life is completely changed. But the narration is enjoyable; reflects the way how the society of that time behaved under different circumstances. Good read to understand so called "mannin manbu".
நா பார்த்தசாரதியின் மிக சிறந்த நாவல் என்று பலராலும் பேசப்படும் இந்த நாவலை முதல் நாவலாக படித்தது மகிழ்ச்சி தான். அனாயசமாக வந்து விழும் கற்பனை கருத்துக்களை மிக ஆழமாக இன்னொரு முறை படித்து அனுபவிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
not much impress ... Aravindan and Poorani is a good fiction characters but the reality feel is missing. something missed in this story may be the reality. overall the book was not bad to read. we should appreciated the writer convey the social awareness..
It took me into a world to explore and experience what it means to be cultured especially Tamil culture. The characters Aravindhan and Poorani is still living in my feelings.
One of the must read book which was written by Na.Parthasarathy, He handling Tamil words beautifully, if you like the typical love story with social issues ,you love this book.