இந்நூல் வெறும் உழவின் வரலாறை மட்டும் கூறவில்லை. இயற்கையை பற்றியும், உயிர்ச்சூழல், விவசாயம், விவசாயி, அரசியல், வரலாறு, செய்ய வேண்டியவை என அனைத்திலும் மிக எளிய எழுத்து நடையில் கூறியுள்ளார். மேலும் பல அறிஞர்கள், விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் ஆதாரத்துடன் மேற்கோளிட்டு காட்டியிருக்கிறார். விவசாயி அல்லாத அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது. பசுமை புரட்சியின் பின்புலத்தை நன்றாக ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியுள்ளார். நன்றி விகடன் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.