Jump to ratings and reviews
Rate this book

சம்படி ஆட்டம்

Rate this book
பால்யத்தின் நினைவுகள் ஒருபோதும் இதயத்திலிருந்து கரைவதில்லை. வாழ்வில் எத்தனைப் புயலடித்தாலும் மழையடித்தாலும் அவை உதிர்வதில்லை. மாறாக, வாழ்வும் உளமும் போராட்டங்களில் அலைவுறும்போது, நினைவுகள் மேலும் வீரியமடைகின்றன. அப்படியான தன் வாழ்வின் தீவிரமான நினைவுகளை; தருணங்களை இயக்குநர் மாரி செல்வராஜ், ‘சம்படி ஆட்டமாக’ இந்நூலில் ஆடிக்காட்டியிருக்கிறார். தன் நிலத்தை, தன் சக உயிர்களை, தன் மனிதர்களை, தன் கனவுகளை, தன் உலகின் வாதைகளை; தன் தோல்விகளை; வெற்றிகளை, மிகக் காத்திரமாகவும் உணர்ச்சி பொங்கவும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்நூல், அவரின் மொத்தப் படைப்புகளும் உருவாகக் காரணமாயிருந்த ஊற்றுக்கண்கள் குறித்த அறிமுகமாக இருக்கிறது. அவரது படைப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் கவித்துவ காட்சியகராதியாக இருக்கிறது. ‘சம்படி ஆட்டம்’ எனும் தலைப்பில், ஆனந்த விகடன் இதழில் தொடராகப் பல வாரங்கள் வெளிவந்தபோது, வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இக்கட்டுரைகள், ஒரே மூச்சில் வாசித்து இன்புற இப்போது சிறப்பான வடிவமைப்பில் நூலாக்கம் பெறுகிறது. மாரி செல்வராஜ் எனும் படைப்பாளியை; அவரின் கலையுலகை அறிந்துகொள்ள; புரிந்து கொள்ள, இந்நூல் ஓர் அழகான வாசலை அகலத் திறக்கிறது!

240 pages, Paperback

Published December 1, 2025

3 people are currently reading
9 people want to read

About the author

Mari Selvaraj

5 books76 followers
Mari Selvaraj (/mɑːrɪ sɛlvʌrɑːdʒ/ தமிழ்: மாரி செல்வராஜ்) is an Indian film director and author who works in the Tamil film industry.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Aravind.
1 review
February 4, 2026
மாரியோட வாழ்வு பல வலிகள், துயரங்கள் நிறைந்திருந்தாலும் நிறைய ஆச்சரியங்களை புதைத்து வைத்திருக்கிறது. ஒரு வாழ்க்கை இவ்வளவு பெருங்குரூரத்திலும் இவ்வளவு உயிர்ப்போட இருக்குமானு பிரம்மிப்பாருக்கு. சுவாரசியமான நிகழ்வுகளை சொல்லி நம்மள உணர்ச்சிவசப்பட வைத்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு பெருந்துயரம் நம் கண்களை நனைக்கிறது. துயரங்களோட சேர்த்து சுவாரசியமான நிகழ்வுகளை சொல்வது மூலமா அந்த துயரங்களின் நீட்சியாக நமக்குள் நியாயமா துளிர்விடும் கழிவிறக்கம், வாழ்க்கையின் சுவாரசியங்களோட இணைந்து தன் தன்மையை மெல்ல இழக்கிறது. துயரங்களைத் துயரமாகவே விடாமல், அவற்றின் நீட்சியாக வாழ்க்கையை முன்வைப்பதே மாரியின் விருப்பமும் கூட. Do read if you can, it quietly confronts you with your previlege.
Profile Image for Sugan.
147 reviews38 followers
March 14, 2026
சம்படி ஆட்டம் reads like a collection of memories that shaped Mari Selvaraj’s worldview. The book moves through childhood experiences, village life, caste realities, and the social environment that later influenced his cinema.

Mari’s writing also helps readers notice everyday realities that often go unquestioned—children helping their families in fields before school, the social structures embedded in village life, and the invisible barriers that exist around education and opportunity.

For readers familiar with Mari Selvaraj’s films, சம்படி ஆட்டம் provides a deeper understanding of the world behind his storytelling. It feels less like a traditional memoir and more like a reflection on memory, identity, and the social landscape that shaped the author.
Displaying 1 - 2 of 2 reviews