மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு. தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார் மாரி செல்வராஜ்!
- அகரமுதல்வன்
புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன் ❤️ • மாரி செல்வராஜின் உலகம் ஆயிரம் சூரியன்களையும் ஓராயிரம் நிலவுகளையும் கொண்டது. அவற்றின் பேரொளி இருட்டின் கடைசி எல்லை வரை ஊடறுத்துச்சென்று அதன் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வல்லமை கொண்டது. அப்பேரொளியின் சில துண்டுகளே இந்தக் காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவனின் சிறுகதைகள். • ஊர் மணத்தோடு, சமூக நியதிகளின் கோரத்தையும், ஆற்றாமையின் துயரத்தையும், வலிகளின் கனத்தையும் தாங்கி உணர்வுகளின் வலைக்குள் ஊசலாடும் கதைகள் பேரொளியின் முன்னால் சாட்சியமாக்கப்படுவதோடு வாசகனையும் அவ்வொளிக்குள் இழுத்துக்கொள்கின்றது.
என்னுடைய புத்தக வாசிப்பின் தொடக்கத்தில் மிகப்பெரிய ஒரு தூண்டுக்கோளாய் இருந்தவர் தான் "மாரி செல்வராஜ்".
நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தான் என்னையும்,என் வாழ்க்கையையும் முன்னிறுத்திய ஒரு படத்தை பார்த்தேன். அது தான் "பரியேறும் பெருமாள்".
அந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாரி. அந்த மாரியின் மூலம் அறிமுகமானது தான், "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்". 2020யில் Corona periodல தான் எனனுடைய புத்தக வாசிப்பை தொடங்கினேன். அப்போது படித்தது தான் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்.
அதன் பிறகு,"மறக்கவே நினைக்கிறேன்". என் கதைகளை என் கைகளை வைத்தே எழுத தூண்டியது மாரியின் முதல் இரண்டு புத்தகங்கள் தான். அப்படியானதொரு நெருக்கத்தை என்னுள் செலுத்தியது அவரின் இரண்டு படைப்புகளும்.
அதே அனுபவங்களை ஒரு இம்மி அளவுகூட குறையாமல் தந்தது தான் இந்த "காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன்".
6 சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு புத்தகம்.
6 வெவ்வேறு கதைகள். ஆனால் ஒரே பாதையில் நடக்கும் வெவ்வேறு விரல்கள் தான் இந்த சிறுகதை தொகுப்பு.
காதல், இறக்கமின்மை, குற்றஉணர்வு, அன்பு, முதிர்ச்சி, காதல்.. என, "எல்லையற்ற காதலில்" தொடங்கி அதே "எல்லையற்ற காதலில்" வந்து முடிகிற தொகுப்பு தான் இந்த சிறுகதை தொகுப்பு...
2. சீனிக்கிழவன் மேலிருந்த காதலுக்காக தாமிரபரணியில் இறங்கியவர்கள் தான் பொயிலாளும்,குட்டச்சியும்.. இன்னுமும் அந்த தாமிரபரணி ஆறு அவர்களை அடித்துக்கொண்டு போவதை எங்கோ இருந்துக்கொண்டு என்னால் காணமுடிகிறது!!
3. செல்லத்துரை தாத்தா ஓடிபோவதைக் கண்டு இரவு முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்த நான் ஏன் இப்போது அழுதுக்கொண்டிருக்கிறேன்??
4. அதிகாலையில் ஊரே கொண்டாடி மகிழும் காட்டுப்பேச்சியை நேசித்த அதே நான்.. அதே ஊரு ஒன்றாக சேர்ந்து பட்டம் கட்டி தூக்கி வீசிய இன்னொரு காட்டுப்பேச்சியை நேசிக்காமல் எப்படியிருப்பேன்?!!
5. தேவதைகள் எப்போதும் வெள்ளை உடையில இருக்கமாட்டார்கள்..
இன்னும் சொல்லப் போனால், அழுக்குபடைந்த ஒரு வேட்டியை அணிந்துக்கொண்டு தன்முன் நின்றிக்கும் அத்தனை சைக்கிளுக்கும் பஞ்சர் போட்டுவிட்டு உங்களிடத்தில் ஐந்து ரூபாய் கொடுத்து "முட்டாய் வாங்கிக்க"ன்னு சொல்லும் சுப்புத் தாத்தாவாகவும் தேவதைகள் இருப்பார்கள்..
6.
ஒரு தூணில் கட்டிவைத்து,ஆணியடித்து சித்ரவதை செய்திருந்தால் கூட இவ்வளவு வலிகளை நான் அனுபவித்து இருப்பேனா என எனக்கு தோன்றவில்லை.
"யார்னே தெரியாத கட்சிக்காரன் ஒருத்தன்கிட்ட தீமூட்டி குழலை கொடுத்து அடிக்க சொன்னங்க பார்..அதான் ரொம்ப வலிக்குது"
"நான் உன் லெட்டரை படிச்சேன்.எனக்கு சாகனும்ன்னு தோணல..எங்கேயாவது ஒரு மூளையில இந்த உலகத்துல நீ உயிரோடு வாழ்ந்தே ஆகணும்ன்னு தோணுச்சு..ஆமாடா நீ ஏன் சாகனும்?"
இந்த இரண்டையும் சொன்ன ஜோவை நானும் காதலிக்கிறேன். அவளை நானும் எப்போதும் மறந்துவிட மாட்டேன்.. .....
அழகான சிறுகதைகளை ஒன்றிணைத்து அதற்கு ஒரு தலைப்பிட்டு அதை வெளியிட்டு அதை படிக்கவைத்து அந்த அழகான சிறுகதைகளை பற்றி எழுதவும் வைத்தது இந்த தொகுப்பு..
ஆதலால், இந்த தொகுப்பின் மூலம் 6 பெரிய அனுபவங்களை தந்தவர் தான் மாரிசெல்வராஜ். அவரை இன்னும் இன்னும் நேசிக்கப் போகிறேன் என்று தோன்றுகிறது.. அவரை என்றும் மறக்கமுடியாது என்றும் தோன்றுகிறது..
Book #14/2026 காட்டுப்பேச்சிகளைக்காதலித்தவன் (Kaatupechigalai Kaadhalithavan ) 104 pages Short story compilation Author: Mari Selvaraj A compilation of mari's short stories written over a decade. Again, mari proves he has excellent command over his characters and their narratives told in the sweet local dialect. Six short stories that interweave folklore and slice of life events which are almost autobiographical. Also, throughout his stories Jo appears as the apple of his eye and her characterization is ♥️. Must read Recco.
the standards that the writer mari selvaraj has set with his previous works are so high that his new release of shortstories felt a bit of not upto his levels. but despite all of these, all the stories in this book has my whole heart especially the last one.