கபிலர் வரலாற்றை நன்கு அறிந்து பயிலவேண்டுவது நம்கடமை. இதனை நன்முறையில் விளக்கியும், ஆய்ந்தும், பாட்டின் வளங்களை விளங்க எடுத்து அமைத்துக் காட்டியும் "கபிலர்" எனும் பெயருடன் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் ஆக்கித்தந்துள்ளார்.
கபிலர் மற்றும் பாரியின் நட்பு இந்தநூலில் தெளிவாக விளக்கப்டுள்ளது. பாரியின் மறைவுக்கு பின்பு கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது எனக்கு புதிய தகவல்.
சேரலாதன் செல்வக்கடுங்கோ போரின் முன்பு தொடங்கும் தன் உண்ணாநோம்பை, வெற்றிகொண்ட எதிரி நாட்டு அரசனின் பட்டத்துயானையின் தந்தத்தை விற்று, அதில் வரும் பணத்தில் வாங்கிய "கள்" குடித்து முடிக்கும் செய்தியும் புதிது.
"கவி உணர்த்தும் கவி" என்பது கபிலருக்கும் அவர்தம் பாடலுக்கும் நிச்சயம் பொருந்தும்.