Jump to ratings and reviews
Rate this book

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்

Rate this book
இப்படியொரு பதைபதைக்கச் செய்யும் வாக்குமூலத்தை இதற்கு முன்பு நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தை உலுக்கி எடுக்கக்கூடிய ஆற்றலையும் உங்கள் நினைவுகளோடு நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடிய அசாதாரணத் திறனையும் கொண்டிருக்கும் முக்கியமான பதிவு இது.

தூக்கு தண்டனைக் கைதியாக இருந்து மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு, தற்சமயம் வாழ்நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் செல்வம் தனது நீண்டகால சிறை வாழ்வை ஒளிவு மறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார். கைதிகளின் இருள் உலகை மட்டுமல்ல காவல் துறையினர், சிறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், குடும்பத்தினர் என்று நூலாசிரியர் காட்சிப்படுத்தும் மனிதர்கள் அனைவரும் நாம் அவர்களைப்பற்றிக் கொண்டிருக்கும் பிம்பங்கள் அனைத்தையும் தகர்த்தெறிகிறார்கள்.

திருடர்கள் தொடங்கி கொலைகாரர்கள்வரை; சாமியார் தொடங்கி சிலைக் கடத்தல்காரர்வரை; விடுதலைப் புலிகள் தொடங்கி அரசியல் கைதிகள்வரை சக கைதிகள் குறித்து செல்வம் தீட்டியுள்ள எண்ணற்ற சித்திரங்கள் திகைப்பில் ஆழ்த்துகின்றன. கடந்த ஐம்பதாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமும் அதே காலகட்டத்தின் குற்றச் சரித்திரமும் ஒருசேர இந்நூலில் கிடைக்கின்றன.

சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே

712 pages, Paperback

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (36%)
4 stars
7 (63%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Kalyanakannan padivasu.
11 reviews
February 13, 2026
30 வருடங்களுக்கும் மேலாக ஜெயிலில் தான் கழிக்க போகிறோம், விடுதலை ஆவோமா? மாட்டோமா? தூக்குதான் நமக்கு தண்டனையாக கிடைக்கும். இந்த சம்பவத்தை ஒட்டித்தான் இவையெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பற்றி யோசனையின்றி, தெரிந்தே இருந்தாலும் இப்படிதான் இது நடக்கணும் என்று நீதிமன்றத்தின் உள்ளேயே வைத்து கொலை செய்யும் பகுதிவரை எந்த ஒரு நியாயப்படுத்தாலும் இன்றி எழுதபட்டு இருக்கிறது. அதன் பிறகான சிறை தண்டனை, தமிழகத்தின் பெரும்பாலான நடுவன் சிறைகளின் நிலைமை, ஊழல், சிறைக்குள் நிகழும் சாதியம், கைதிகளுக்கு மறுக்கபடும் உரிமைகள், பல்வேறுபட்ட கைதிகள் உடனான நடப்பு என சிறப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் நிகழும் சிறை மரணங்களின் எண்ணிக்கை உண்மையில் பொது சமூகம் கவனிக்கவேண்டியது. தப்பு செய்தவர்கள் அவர்களுக்கு ஏன் நாம் யோசிக்கவேண்டும் என்பது காவல்துறைக்கும் சிறைத்துறைக்கும் கட்டற்ற சுவந்திரத்தை அளிக்கிறது. அது என்கவுண்டர், சிறை மரணம், பாலியல் துன்புறுத்தல், நீண்ட நாள் விசாரனை கைதியாக சிறையில் இருப்பது என பொது சமூகத்தை அதிலும் பொருளாதாரம், அதிகாரம், அரசியல் என எந்த தொடர்பும் இல்லாதவர்களை தான் அதிகம் பாதிக்கிறது.

இதில் முன்வைக்கபடும் சிறை சீர்திருத்தங்கள் பெரும்பாண்மை முக்கியமான அதே சமயம் அடிப்படையானையும் கூட.
15 reviews
June 13, 2026
ஒரு சிறந்த சிறை வாழ்வியல் புத்தகம் தமிழக சிறையைப் பற்றி தெரிந்து கொள்ள இதை விட நல்ல நூல் எனக்கு தெரிந்து வேறில்லை
64 reviews2 followers
July 12, 2026
A very important book about jails, punishment and our government. Said through the words of a living inmate of Tamilnadu Jails. The most interesting non fiction book I have ever read.
19 reviews
August 4, 2026
Must read book for everyone particularly teenagers to understand risk of not handling emotion properly, forming good circle of friends and where it will lead if a single decision taken hastily
Displaying 1 - 4 of 4 reviews