தமிழகத்தில் மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு பகிரப்படுகிறது என்ற கேள்விகள் முக்கியமானது. இக்கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான பதிலகளைத் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி இந்நூலில் வழங்கியுள்ளார். இப்பதில்களால் புதிய தீர்வுகளை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
திரு.சா.காந்தி 1966இலிரிந்து 2003 வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பொறியாளராக பணியாற்றியவர் .மின் சங்க இதழின் ஆசிரியராகவும் ,சங்கத்தின் இதர பொறுப்புகளிலும் இருந்தவர் .1979 ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை அதன் தலைவராகவும் இருந்தவர் .2004 இல் மின்பொறியாளர் சமுதாய அமைப்பாக 'தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பை ஏற்படுத்தினார் .2005 ஆம் ஆண்டிலிருந்து அதன் தலைவராக இருந்து வருகிறார் .