Jump to ratings and reviews

தண்டகாரண்யத்தில் சீதை [Thandakaaranyathil Seethai]

விலங்குகளையும் ஆதிவாசிகளையும் கொன்றுதான் சந்திரிய தர்மத்தைக் காக்க வேண்டும் என்றால், எனக்கு அந்தச் சத்திரிய தர்மமும் வேண்டாம், ரிஷிகளின், முனிவர்களின் ஆசீர்வாதமும் வேண்டாம். ராமன் தனக்கான அடையாளத்தைப் பிறருடைய இரத்தத்திலிருந்து வரையப்போகிறான். கொலைகளைச் செய்பவர்களே உலகில் அதிகமாகப் புகழை ஈட்டுகிறார்கள். அத்தகைய புகழைத் தேடியே ராமனும் போகிறான். மனிதர்களுக்குத் தேவை உண்மைகளல்ல, பொய்கள். கற்பனைகள். அதீதக் கற்பனைகளும் அதீதமான பொய்களும் எந்த மனிதனை முன்வைத்து கட்டப்படுகிறதோ பின்னாளில் அவனே கடவுளாக்கப்படுவான்.

127 pages, Paperback

First published January 1, 2025

Loading...
Loading...

About the author

Imayam

26 books107 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (40%)
3 stars
3 (60%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sylvester Marshall.
33 reviews1 follower
March 6, 2026
These short stories are little window into the lives and realities of people in our society. My favourites of the lot are அடங்காத அழுகை and முகம்.
Profile Image for Vignesh Narayanan.
126 reviews8 followers
March 13, 2026
பெத்தவன் மூலம் இமயத்தின் எழுத்துக்கு அறிமுகமானேன், மிகவும் தாக்கிய நூல்களில் ஒன்று பெத்தவன், மனித உளவியலை, சாதிய மற்றும் சமூக பிரச்சனைகளை நுட்பமாக அலசும் அதே சமையம் யதார்த்த தன்மை விடாத அவரது எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்தது, செல்லாத பணம், எங் கத, கோவேறு கழுதைகள் என்று தொடர்ந்து அவரது நூல்களை வாசிக்க தள்ளியது. நண்பர் கிருஷ்ணாவின் பரிந்துரையில் சமீபத்தில் வெளியான தண்டகாரண்யத்தில் சீதையை வாசிக்க நேர்ந்தது, இதுவே அவர் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் சிறுகதை தொகுப்பு. அறுப்புக்கு போன மாடு, முகம், வீம்பு என்ற மூன்று சிறுகதைகள் என் மனதில் நன்றாக நின்று விட்டது.

ஜல்லிக்கட்டில் ஆதிக்க சாதியினரால் வளர்க்கப்பட்ட மாடு ஒன்று ஒரு தலித் இளைஞனால் மாடு பிடிபட்டு போக, ஆதிக்க சாதியவன் அவமானத்திலும் கோபத்திலும் அந்த மாட்டை (வருட கணக்காக சொந்த மகன் போல, மனைவியை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்த்த மாட்டை) வஞ்சியும், பயங்கரமாக தாக்கி கண்ணில் இருந்து ரத்தம் காயம் ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கும் ஆளின் சாதிய வக்கிர புத்தி எந்த அளவு இருக்கிறது என்பதை காணலாம், பிடிப்போன மாட்டை அறுப்புக்கு அனுப்பும் முடிவு செய்து நண்பர்களிடம் குடித்து மனம் மாறி, மாட்டை பிடித்தவர்கள் கொண்டாடியதால், அவர்கள் ஊரையே அவமானப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் செய்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் மனநிலை - மாட்டை பெண்ணாக, அவர்களின் மானம் மரியாதை கௌரவத்தை ஒரு பெண்ணின் மீது, மாட்டின் மீது வைக்கும் வக்கிரபுத்தியை எழுத்து மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது, அறுப்புக்கு போயிருந்தால் அதுவும் ஒரு ஆணவ கொலை தான்.

முகம் என்னும் மற்றொரு சிறுகதை ஒரு பெண்ணின் உளவியலை unapologetic ஆக கையாண்டது சிறப்பம்சமாக இருந்தது, இறுதியில் அந்த பெண்ணை திருமணம் செய்யும் நபர் அவளை சமாதானம் செய்ய சொல்லும் ஒரு வரி குழப்பமும் தயக்கமும் கொண்டிருந்த பெண்ணின் மனதை சற்று சுலபமாக அந்த வரி அவளுக்கு இதம் தந்து அவளது மனதை சற்று நிதானமாக்குகிறது.

வீம்பு, பொட்டச்சி மனசு என்று மற்ற கதைகளும் நன்றாக இருந்தாலும் பெரும்பான்மையான கதைகள் குறிப்பாக நூலின் தலைப்பு கதையான தண்டகாரண்யத்தில் சீதையில் சீதையின் பார்வையை எடுத்துக்கொள்வது புதிய முயற்சியாக தோன்றவில்லை; இதுபோன்ற retelling-கள் ஏற்கனவே பலமுறை செய்யப்பட்டதால், இந்தக் கதையில் ஒரு ‘wannabe’ தன்மை மட்டுமே வெளிப்படுகிறது.

சிறுகதைகளை விட இலக்கியத்தில் longer formats ஏ இமையத்தின் பலம் என்றே இந்த நூல் தோன்றவைக்கிறது.
Displaying 1 - 3 of 3 reviews