மகத்தான இந்திய நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது. இந்தக் கட்டுரைகளின் வழியே இந்திய இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்திய சமூகம் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கை அடைந்துள்ள மாற்றங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நிகராக இந்திய இலக்கியத்திலும் பல தலைசிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறான தலைசிறந்த 30 நாவல்களை இந்தியாவின் பல மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து, எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நூலில் பேசியுள்ளார்.
இந்த நூலை வாசிக்கும் போது, இந்திய சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், குடும்பங்களின் ஆழமான வேர்கள், வரலாற்றின் அறியப்படாத உண்மைகள், பெருநகர வாழ்க்கையின் சிக்கல்கள் ஆகியவை தெளிவாகப் புரிகின்றன. அதேசமயம், இந்திய நாவல்களின் தனித்துவமான கதை சொல்லும் முறை மற்றும் வாழ்க்கைப் பார்வையையும் ஆழமாக உணர முடிகிறது.
இதில் எனக்குப் பிடித்தவை: ஒரு குழந்தையின் முதல் வெளிச்சத்தைப் பற்றி பேசும் "கவிதாலயம்", "நீலகண்ட பறவையைத் தேடி" நாவலில் வரும் சோனாலி பாலி ஆற்றின் வருணனை, பஞ்சாப் எழுத்தாளர் குல்ஜார் சிங் சந்து தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு எழுதிய "துருவ நட்சத்திரங்கள்", குடகு நாட்டின் கடைசி மன்னனை பதிவு செய்யும் "சிக்க வீர ராஜேந்திரன்", விவசாய வாழ்க்கையும் சகோதர பாசமும் கலந்த "கோதானம்", பதின் பருவத்தினர் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டும் "சிவப்புத் தகரக் கூரை", மலையாள எழுத்தாளர் பஷீரின் "எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது" கதையில் வரும் குஞ்சுப்பாத்துமா கதாபாத்திரம், அதிகாரத்தில் இருப்பவர்களின் விபரீத ஆசைகளை வெளிக்காட்டும் "தர்பாரி ராகம்", தூக்கு தண்டனையை பரம்பரை தொழிலாகக் கொண்ட குடும்பத்தின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் ‘ஆராச்சார்’ போன்ற நாவல்கள் குறித்த கட்டுரைகள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தலைசிறந்த இந்திய படைப்புகளை அறிந்து, அவற்றின் சுவையும் செழுமையும் அனுபவிக்க விரும்பும் வாசகர்கள், தவறாமல் இந்த நூலை வாசிக்க வேண்டியது அவசியம்