1987ல் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு மத்திய இணை அமைச்சரின் காரியதரிசியாக பணிபுரிந்து கொண்டிருந்த நண்பன் ஒருவன், எனக்கு போன் செய்தான். போனில் ஒரு தகவல் சொன்னான்.
அது ஒரு கிசு கிசுதான்.
அந்த ஒரு வரி கிசுகிசுத்தான் இந்த நாவலின் கரு, ஒரு குறுநாவலை பெருநாவலாக எழுதலாம். ஒரு சிறுகதையை கூட நாவலாக எழுதலாம்.
நான் ஒரு கிசு..கிசுவைத்தான் 400 பக்கங்களுக்கு நாவலாக எழுதியிருக்கிறேன். அந்த கிசு..கிசுவிற்க்கான ஆதாரங்களை தேடி துருவி திரட்ட முற்பட்ட எனக்கு பல அனுபவங்களை சிலந்தி நூலாம்படை ஒன்றை பின்னுவதுபோல், அந்த கிசுகிசுவை மையமாக வைத்து என் கற்பனை நூலால் வலை ஒன்றைப் பின்னியிருக்கிறேன். அதுவே உங்கள் கைகளில் 'காலச்சக்கரமாக' சுழன்று கொண்டிருக்கிறது.
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.
தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.
வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சமீபத்திய புத்தக திருவிழாவில் இந்த புத்தகத்தை ஒரு வழியாக வாங்கி மறுநாளே வாசிக்கவும் தொடங்கி விட்டேன்.
ஒரு பிளாக் மாஜிக் கதை. தொடக்க அத்தியாயங்கள் டில்லி, சென்னை, காஷ்மீர், கும்பகோணம் என்று பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை மையமாக வைத்து நடக்கிறது. சற்றே குழப்பமாக இருந்தாலும் ஒரு சில அத்தியாயங்களை கடந்து அனைத்தும் ஒரு இடத்தில இணைய தொடங்குகிறது. ஒரு கமர்ஷியல் சினிமாவை போல் வேக வேகமாக பக்கங்கள் நகர்கின்றன.
ஸ்ரீ சக்கரத்தை மய்யமாக வைத்து பல தலைமுறைகள், சில மனிதர்கள், சில குழப்பங்கள், சில சஸ்பென்ஸ்கள் என்று சுவாரசியமாகவே இருக்கிறது. எனினும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களில் கூறப்படும் ஒரு சில ப்ளாஷ்பாக்குகள், அதில் வரும் மனிதர்கள் பெயர்கள் பெரும் குழப்பமாக இருக்கின்றன.
இந்த ஆசிரியரின் சங்கதாராவை போல் இந்த புத்தகமும் நடக்காத ஒரு விஷயத்தை நடந்திருக்கலாம் என்று கற்பனை செய்து எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவல். புத்தகம் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிடும் அளவுக்கு புருடாக்கள் அதிகம். :-)
ஆனால் படிக்க படிக்க சுவாரசியமாக இருப்பதை மறுக்க முடியாது. :-)
விறுவிறுப்பான நடை . விடை அறியப்பட்ட கேள்விகள் .தெரியா விவரம் விவரிக்கும் வேகமான பக்கங்கள் . இழுத்தடிக்காத பகுதிகள் என ஒரு இலக்கிய வாசிப்பிலிருந்து விடுபட நினைக்கும் வாசகனுக்கான complete பாக்கேஜ் என்றே இந்த நாவலை சொல்லலாம் . எடுத்த நாளிலே முடிக்கமளவு எளிய புத்தகமாக அதே சமயம் படிக்க ஆர்வமுட்டும் புத்தகமாக இருக்கும் இந்த காலச்சக்கரம் , ஜெட்டின் சக்கரம்ப் போல் வேகமாக ஓடி படிப்பவர் மனதை வெல்கிறது .
வேறு வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இருப்பதால் சலிப்பு தட்ட வில்லை என்று நினைக்கிறேன். மாந்தீரிகளீனால் ஆன பழி வாங்கும் கதை.
வேட்டி அணிவது இந்தியர்களின் வழக்கமா, இல்லை தமிழர்களின் வழக்கமா? அரிசி சோறு சாப்பிடாம மிருகங்களை வதைத்து சாப்பிடறது ... அவங்களுக்குப் பிறக்கும் குழந்தைங்க மூர்க்கமா இருக்கும் - உள்ளிருக்கும் காவித் தீவிரவாதி அப்ப அப்ப வெளி வருவான் போல!
ஆமாம், முதல் அத்தியாயத்தின் முடிவில் நான் அவளைப் பார்த்தேன் என்று வசுந்திரா போனில் யாரிடம் அழுவாள்?
ஒரு சிறந்த நாவலுக்கான பிரேம் ஒர்க் எது? முதல் மூன்று நான்கு அத்தியாங்களுக்குள் கதையின் கருவை வாசகனுக்கு காட்டி ஆர்வத்தை தூண்டுவது. இந்த நாவலில் முதல் நான்கு அத்தியாங்களிள் ஆசிரியர் பல முடிச்சுக்களை போடுகிறார். பாரால்லேல் ஸ்டோரி டெல்லிங் பார்மட்யில் தொடங்கி, பல கேரக்டர்களை அறிமுகம் செய்து, பல சுவரஸ்யமான முடிச்சுக்கள் போட்டு, அதற்கான விடைகளை கதையுடன் சேர்த்து கொடுத்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதுடன் கதை முடிகிறது. A perfect screenplay elements நிறைய உள்ள ஒரு விருவிருப்பான திரில்லர் நாவல்.
Felt like watching a thriller movie with non linear screenplay set. The way the author has setup the world introducing the characters in the intial few chapters amped up my bonding with book. May be I was binge-reading it throughout. While it surely kept the tempo until the end, the overdosage of creative imaginations caused a bit of mental fatigue. Worth reading once!
Almost a Tamil Davici code,so much characters and storyline brought together to a proper ending,definitely lot better than overrated Indira soundarrajan stories.Amust read.