பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்! உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!
G. Nammazhvar (Tamil : கோ. நம்மாழ்வார், 6 April 1938 – 30 December 2013) was an Indian green crusader, agricultural scientist, environmental activist and organic farming expert best known for his work on spreading ecological farming and organic farming. He led the protest against the methane gas project started by Great Eastern Energy Corporation proposed in the Cauvery delta region of Tamilnadu. Nammazhvar was the author of several Tamil and English books on natural farming, natural pesticides & natural fertilizers and was featured in magazines & television programs.
இயற்கை தாயின் அரவணைப்பில் வளரக்கூடிய ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம், இது நம்மாழ்வார் ஐயாவின் எழுத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவு பெற மிகவும் உதவும்.
This book is started well but it has too many information. This will make the reader bored and it is expression of all distress due to globalisation. This book has many details that will help to do integrated farming and agriculture. Well said but the issue is hoe it will be taken by the readers due to too many information on over dosage.
ஒவ்வொருவரும் இயற்கை விவாசயத்தின் மகத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இயற்கை இல்லையேல் இந்த அவணியில் ஏதும் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும். எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய படித்து உணரவேண்டிய புத்தகம்.