ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்திருந்தாலும். ஒப்பனை இல்லாத அழகு அவளுடையது. மிக மிக சாதாரணமாகத் தான் இருந்தாள். கோயிலுக்குச் செல்வது போல அடக்கமான அழகு. அம்பிகாவுக்கு மிகவும் அவளைப் பிடித்து விட்டுத் தான் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.
சம்பிரதாயமாக வணங்கி விட்டு அனைவருக்கும் தேநீரை கொடுத்துவிட்டு அவள் ஓரமாக நின்று கொண்டிருக்க.
“இங்க வாம்மா இங்க வந்து உட்காரு?” என்றார் அம்பிகா. அவளும் அமைதியாக வந்த அவர் அருகில் அமர்ந்தாள்.
“உன் பேர் என்னமா?’ என்று கேட்டார். அவள் திகைத்து விழித்து விட்டு அண்ணனைப் பார்க்க.