Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.
முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.
எம்.ஆர்.ராதா. தன்னிகரற்ற நாடக கலைஞன். அக்காலத்திலேயே புரட்சி கருத்துக்களும் பகுத்தறிவும் கொண்டவர். மனசாட்சியின் பிரதிபிம்பம். கம்ப விழாவில் கம்பனின் ஜாதியை ஆராய்ந்தவர். மனஸ்தாபத்தில் எம்.ஜி.ஆரை சுட துணிந்தவர். எந்நிலையிலும் மனகசப்பிலும் நகைச்சுவையை கைவிடாதவர். பெரியாரின் தீவிர ரசிகர். இவருக்காகவே நாடகத்திற்கு தடைவிதிக்கும் சட்டமானது சர்க்காரால் இயற்றப்பட்டது என்றால் அது மிகையாகாது. காங்கிரஸ் வெள்ளைகாரனின் மகன் என்றுரைப்பவர். எனினும் இவருக்கு காமராஜர் மேல் தனிமரியாதை உண்டு. திரையுலகினரையும் அரசியல் பிரமுகர்களையும் விமர்சிக்க தயங்காதவர். ராமாயணம் என்ற தனது நாடகத்தின் மூலம் ராமனை அக்குவேர் ஆணிவேராய் ஆராய்ந்தவர். முகில் ராதாவின் சிடுசிடுப்பையும், பெரும்பான்மையை பாதிக்கும் குத்தல் ஒற்றை வரி வசனங்களையும் அதே நேரத்தில் அவரின் துணிச்சல் நிறைந்த போக்கையும் எளிதனான எழுத்துநடையில் வடித்துள்ளார். எம்.ஆர்.ராதா என்ற சகாப்தத்தை நாளைய தலைமுறை புரிந்துகொள்ள உதவும் கையேடு :)
ஆரம்பத்தில் இவரைப் பற்றி அதிகம் தெரியாது. இப்போது திராவிடர் கழகத்துக்கு பெருந் தொண்டாற்றிய இவரை கொண்டாடுவது போல் தெரியவில்லை. எம் ஜீ ஆர் யை சுட்டது காரணமா? அவர் பேசிய பல, இன்றும் அப்படியே பொருந்துகிறது.
- ஆண்டவனுக்கு கோயில் எடுப்பது நாம், நமது உழைப்பு. சிலை செய்வது நமது சிற்பிகள். ஆனால் கும்பாபிஷேகம் என்று பார்ப்பான் வந்து நிரந்தரமாகக் குடியேறிவிடுகிறான்.
- திருடன் திருடனிடம் கொடுத்த நிர்வாகமே இந்தியச் சுதந்திரம்
- எல்லா வகையிலும் வடநாட்டார் நம்மை அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.
- சினிமாக் கூட்டம் ஒரு விபச்சாரக் கூட்டம். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய மரியாதை?
- இந்த கம்ப நாடாரின் விழாவிலே... அவரு நாடாரு இல்லை. இந்த கம்ப முதலியார்... அவரு முதலியாரும் இல்லை. அப்ப சாதி கிடையாதா? இப்பதான் சாதியை சொல்லிக்கிட்டிருக்கோமா?
- கூத்தாடிகள் வேஷம் போட்டு நடிப்பவர்கள். காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழி மக்கள் தன்மையான கதையையும், எந்த உருவத்திலும் நடிப்பவர்கள். (சமீபத்திய உதாரணம் நடிகை சமந்தா)
- பகவானின் கோயிலில் விசிட்டிங் ரூம் (கருவறை), கிச்சன் ரூம் (மடப்பள்ளி), பெட் ரூம் (சயன அறை), ஏன் கக்கூஸ் கட்டல?
- தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்பவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப்படை வேண்டும் இந்த நாட்டுல
மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் (எம்.ஆர் ராதா) என்னாமா ஆக்ட் கொடுப்பாரு தெரியுமா? தெரியாதவன் ‘தென்னாட்டுத் திரை வரலாற்றில் மீண்டும் ஒரு பொன்னேடு. நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் “ரத்தக்கண்ணீர்” - தீபாவளி திருநாள் முதல்’ - 1954 தீபாவளி திருநாளன்று(நவம்பர் 6) வெளியான ரத்தக்கண்ணீர் படத்த போயி பாருங்க. எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இது.